காஷ்மீரில் குண்டுவெடிப்பு: 4 போலீசார் பலி

போலீஸ் படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாலும் உரிமை கோரப்படும் பகுதியில் சமீப காலங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொபொர் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சனிக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

வேலைநிறுத்தத்திற்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், கடை ஒன்றின் அருகில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனத்தை ஆயுதக் குழுவினர் வைத்துள்ளனர்.

ஸ்ரீநகர் அருகே உள்ள துணை ராணுவ முகாமில், ஆயுதக் குழுக்களால் இந்திய பாதுகாப்பு படையினர் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பாதுகாப்பு படையினரால் பிரபல தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதில் இருந்து இப்பகுதியில் மீண்டும் புதிய வன்முறைகள் தொடங்கின - உள்ளூர் மக்களுடன் பரவலான மோதல்களை இது தூண்டியது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்