தொடரும் பொருளாதார சரிவு: பண மதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி வரியும்தான் காரணமா?

  • 7 ஜனவரி 2018

வரும் நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆகக் குறையும் என்று மத்திய புள்ளியியல் துறை கூறியுள்ளது. இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக உண்டாகும் சரிவாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கு காரணம் நரேந்திர மோதி அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகிய நடவடிக்கைகளே என்பது சரியா, வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறுவது சரியா என்று, பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

"ஜி.எஸ்.டி மற்றும் பணநீக்கம்தான் இதற்கு முக்கிய காரணங்கள். சற்று சிந்திப்போம். ஒரு குறிப்பிட்ட பொருளின் மதிப்பை அதிகரிப்பதன் மூலம் எப்படி அது நுகர்வோரை கவர முடியும். அதுவரை சீராக இருந்த செலவாணியை கண்டிப்பாக பாதிக்கும். பணநீக்கம் என்பது முதலில் மக்கள் பொருளாதாரத்தில் தடையை போட்டால் வியாபார ரீதியான எத்தனையோ பரிவர்த்தனை (Transaction) முடங்கியிருக்காதா!! ஆக ஜி.எஸ்.டி, பணநீக்கம்தான் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டதுபோல இது முட்டாள்தனமான யோசனை," என்று கூறியுள்ளார் அருண்குமார் ஐயப்பன்.

சூனா பானா எனும் பெயரில் ஃபேஸ்புக் பதிவிடும் நேயர்,"நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்து வந்தாலும், பொருளாதார ரீதியாக மக்கள் மிகவும் சிரமப்பட்டாலும், இதையெல்லாம் மக்களிடமிருந்து எதிர்ப்பாக எழுந்து விடாமல் பார்த்து கொள்வதில் மோடி அரசு வெற்றி பெற்று வருகிறது," என்று கூறியுள்ளார்.

"வேலை வாய்ப்பு, விவசாயம், புதிய முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை எடுக்காத மதவாத அரசு..! அனைத்துதுறையிலும் தோல்வி..!," என்று பதிவிட்டுள்ளார் சுரேஷ் சுரேகா எனும் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.

"மிக விரைவாக வளர்ச்சியை எட்டிவிட நினைத்துக்கொண்டு தாறுமாறாக செய்யப்பட்ட காரியங்களின் விளைவுதான் தொடர்ச்சியான பொருளாதார வீழ்ச்சி," என்று கருதுகிறார் ராபர்ட்.

''கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது, பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும்'' என்று கூறியுள்ளார் வெங்கட் முருகன் எனும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :