திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் படத்தின் காப்புரிமை Thinkstock

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவில் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன், தேசியக் கொடியின் படத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மேலும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

சுதந்திரம் குறித்த தனிப்பட்ட கருத்தை மக்கள் கடைப்பிடிப்பதை விடுத்து உறுதியான தேசபக்தியை உணர வேண்டும் என்று அப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்