வாதம் விவாதம்: "தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பதில் இல்லை தேச பக்தி"

  • 10 ஜனவரி 2018
தேசிய கீதம் படத்தின் காப்புரிமை AFP

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை. விருப்பப்பட்டால் இசைக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, "தனது நிலைப்பாட்டை மத்திய அரசு முன்பே வெளிப்படுத்தி இருந்தால் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமா? அல்லது தேசிய கீதம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் மத்திய அரசுக்கு தெளிவான பார்வை வேண்டுமா?" என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு, நமது நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

சரோஜா பாலசுப்ரமணியன், "தேசப்பற்று தானாக வர வேண்டும். பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே வீடுகளிலும், பள்ளிகளிலும் ஊட்டி வளர்க்க வேண்டும்.ஆனால் இந்தக் காலத்தில் தேசப் பற்றா, கிலோ என்ன விலை? என்று கேட்கிறார்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

"தேச பக்தி என்பது எழுந்து நிற்பதில் இல்லை....நாட்டுக்காக ,நாட்டு மக்களுக்காக உயிர் துறக்கவும் தயாராக இருப்பதே தேச பக்தி." என்கிறார் அமீன் ஜபார்.

ஷேக் ஜமூனா கானின் கருத்து இவ்வாறாக உள்ளது: "மக்கள் பொழுதுபோக்கு காக திரையரங்குகளுக்கு வராங்க. அங்கு தேசிய கீதம் இசைப்பது தேவையற்றது தான். அரசு அலுவலகங்களில் தினமும் காலையில் இசைக்கலாம்."

"தேசிய கீதம் இசைப்பதில் எப்படிப்பட்ட சட்டம் போட வேண்டும் என்று தெரியாமல் மத்திய அரசு குழப்பத்தில் உள்ளது போல் தெரிகிறது" என்கிறார் புலிவலம் பாட்ஷா.

மாதவன் ராமன், "ஆம். திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை முன்பே வெளிப்படுத்தி இருந்தால் இத்தகைய குழப்பங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட்டு இருக்கும்." என்று பதிவிட்டுள்ளார்.

"தமது தேசத்தை விரும்புபவர்கள் தாமாகவே தேசிய கீதம் பாடுவார்கள். அரசு கூறவேண்டியல்லை. அரங்குகளிலும் தேவையில்லை" என்பது வேலாயுதம் கந்தசாமியின் கருத்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்