குடியேறிகளுக்கு எதிராக மோசமான சொல்லை கூறவில்லை: அதிபர் டிரம்ப் மறுப்பு

  • 12 ஜனவரி 2018

ஹைத்தி, எல் சால்வடோர் மற்றும் ஆஃப்ரிக்க நாட்டவர்களை மோசமான வார்த்தையை பயன்படுத்தி திட்டவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ''மலத்துளை நாடுகள்'' என அமெரிக்காவில் குடியேறிய அயல்நாட்டவர்களை திட்டியதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த விவகாரம் குறித்து பேசிய ஒரு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி டிரம்பின் கருத்துக்கள் இனவெறியை காட்டுகின்றன என்றும் அந்த சொற்கள் மனிதத் தன்மையின் மோசமான பக்கத்தை திறந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் குடியேற்றம் குறித்த சந்திப்பில் ''நான் இந்த மொழியை உபயோகிக்கவில்லை'' என ட்வீட் செய்துள்ளார் டிரம்ப். தான் பயன்படுத்திய சொற்கள் கடுமையானவை என்றும் ஆனால் இப்படிச் சொல்லவில்லை என்றும் அவர் எழுதியுள்ளார்.

டிரம்ப் பேச்சு குறித்த செய்திக்கான எதிர்வினை என்ன ?

அமெரிக்க தூதரிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது போட்ஸ்வானா. மேலும் இது மிகவும் பொறுப்பற்ற செயல் என்றும், அவரது கருத்துக்கள் இனவெறியானது மற்றும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.

டிரம்பின் கருத்து வெளிப்படையாக எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது என ஆப்ரிக்க ஒன்றியம் கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை ஆணைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், '' டிரம்ப் பற்றிய இந்த செய்தி உறுதியானதாக இருப்பின் இது அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாகவும், அமெரிக்க அதிபரிடம் இருந்து அவமானப்படத்தக்க கருத்து வெளியாகியிருக்கிறது. என்னை மன்னியுங்கள் ஆனால் இதனை இனவெறி என குறிப்பிடுவதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :