போகியன்று வீட்டுக் கதவைத் தட்டும் 'குப்பைக்கார' இளைஞர்கள்

  • 13 ஜனவரி 2018
கழிவுகள் படத்தின் காப்புரிமை aula Bronstein/Getty Images)

குப்பைகளைப் பிரிப்பது ஏன் அவசியம் என்பது குறித்து பொதுமக்களுக்கு புரிய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் சேலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் சிலர்.

குப்பைகளை முறையான வகையில் பிரித்து கழிவுகளை அப்புறப்படுத்த ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்ட முயற்சி எடுத்துள்ளனர் `குப்பைகாரர்' குழுவினர்.

குப்பைகளை அப்புறப்படுத்துவதில் இல்லத்தரசிகள் பங்கும் ஒத்துழைப்பும் மிக முக்கியமாது என்கின்றார் இக்குழுவை சேர்ந்த பரணிதரண் என்னும் பொறியியல் பட்டதாரி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சேலம் பட்டதாரிகளின் போகி பக்கெட் சேலஞ் திட்டம்

"போகி பண்டிகையில் பழையன கழிதல் என பொருட்களை எரிப்பது வழக்கம். இவ்வாறு அப்புறப்படுத்துதல் என கலாசாரத்தை மையப்படுத்தி குப்பைகளை தரம் பிரிக்காமல் அனைத்தையும் எரிப்பதை தவிர்த்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை கொட்ட வேண்டும்," என வலியுறுத்துகிறார் சைதயன் என்னும் பொறியியல் பட்டதாரி.

கழிவு மேலாண்மை திட்டம் முறைபடி செயல்படுத்தவும், போகி பண்டிகையை சார்ந்து போகி பக்கெட் சேலஞ் என்ற திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து துவங்கியுள்ளதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images

இவ்வாறு உள்ள குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், உட்படாதவை என பிரித்து குப்பைகளை அகற்ற முயல்வதாக தெரிவித்தார்.

மேலும் இக்குழுவினர் இத்திட்டத்தை முறைப்படுத்தி நடைமுறைப்படுத்தவும், வருடம் முழுவதும் இத்திட்டத்தினை செயல்படுத்தவும் விழைவதாகவும், இப்போகிப்பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் இவ்வகையான குப்பை தொட்டிகள் வைத்துள்ளதாகவும், அவை நிறைந்தவுடன் குடியிருப்புவாசிகள் தங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டால் தாங்களே வந்து அப்புறப்படுத்துவோம் என குடியிருப்பு வாசிகளிடம் எடுத்துரைத்தார் ஹரிணி என்ற ஆர்வலர்.

மேலும் மறுசுழற்சிக்கு உட்படுத்தும் பொருகள், உபயோகிக்கும் நிலையில் உள்ள துணி வகைகள் தேவைப்படுவோருக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நம்மை சுற்றியுள்ளவர்கள் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்துகின்றார்.

முதற் கட்ட சேவையை ஒட்டி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 இடங்களில் குப்பை சேகரிக்கும் பெட்டி வைக்கப்பட்டு, போகிப் பண்டிகையின்போது எரிக்கும் முறையை தவிர்த்து , முறைப்படி அதற்கான குப்பை கூடையில் போட வலியுறுத்துகின்றனர் `குப்பைக்காரன்' குழுவினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்