வாதம் விவாதம்: ''அடுத்த தலைமுறையினருக்கு இந்த பூமியை விட்டு செல்ல வேண்டும்''

''இளைய தலைமுறையினருக்கு இந்த பூமியை விட்டு செல்ல வேண்டும்''

தமிழகத்தில் போகி பண்டிகை கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு  கடந்த ஆண்டை விட இந்தாண்டு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு தாமாக முன் வந்து பாரம்பரிய கொண்டாட்ட முறையை மக்கள் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுமா? மாசைக் கட்டுப்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே. . ''

''மக்கள் எப்பொழுதும் இவ்வாறு தான் கொண்டாடுகின்றனர். இந்த சுற்றுசூழல் மாசு தொழில்துறை புரட்சிக்கு பிறகு நடக்கும் அவலம். சரியான மாசு கட்டுப்பாடு இல்லாததாலும் வாகன பெருக்கத்தாலும் மற்றும் இவற்றுடன் மக்களும் தவறு செய்வதால் இவ்வாறு நடக்கிறது. மக்களுக்கு மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் போதாது'' என்கிறார் ரமேஷ் எனும் நேயர்.

''அரசு பிரசாரம் செய்து, விழிப்புணர்வு மக்களிடம் வர வேண்டும். மக்கள் அதை புரிந்து தானாக முன்வந்து நம் மரபு வழி பண்டிகைகளில் ஆக்கப்பூர்வ சிறு மாறுதல்களை புகுத்த வேண்டும்'' என்பது தீபக்கின் கருத்து.

''வெறும் பழைய துணிகளை தீயிட்டால் இவ்ளவு பாதிப்பில்லை. ஆனால் சிலர் டயர்களையும் சேர்த்து எரிக்கிறார்கள். அந்த காலத்தில் பழைய துணிகளை மட்டுமே தீயிட்டனர். அப்போது ஏது டயர்கள். ஆக டயரை எரிப்பது தற்போதைய நகர மக்கள் மட்டுமே''. என கருத்து பதிவிட்டுள்ளார் சூர்ய பிரகாஷ்.

''பாரம்பரியம் என்ற பெயரில் நமக்கு நாமே அழிவை தேடித் கொள்ளக்கூடாது.சுற்றுப்புற சூழலை மாசு படாமல் பாதுகாத்து நம் இளைய தலைமுறையினருக்கு இந்த பூமியை விட்டு செல்ல வேண்டியது நம் கடமை''. என பதிவிட்டுள்ளார் சரோஜா.

''சுற்று சூழல் மாசுபடுத்தாத பொருட்களை சிறிது எரித்து பாரம்பரியத்தை விட்டு கொடுக்காமல் பண்டிகைகளை கொண்டாடலாம்,அளவுக்கு அதிகமானால் தான் தீங்குகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது!!!'' என்பது பாஷா எனும் நேயரின் கருத்து.

''போகி அன்று மட்டும் அத்தியாவசிய வாகனத்தை தவிர மற்ற வாகனம் ஓட்டதடை விதிக்கலாமே'' என கூறுகிறார் ரமேஷ்.

''மத சடங்குகள் சமூக வாழ்வில் மட்டும் அல்ல, சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பவைதான்'' என்பது பாலுசாமியின் கருத்து.

''டிசம்பர் 31 தேதியை விட குறைவாக தான் உள்ளது'' என்கிறார் சக்திவேல்.

''ஆம் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்தனும்'' என கருத்து பதிவிட்டுள்ளார் பிரவீன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்