தோனியிடம் பாராட்டு வாங்கிய இரண்டரை வயது சென்னை கிரிக்கெட்டர் (காணொளி)
தோனியிடம் பாராட்டு வாங்கிய இரண்டரை வயது சென்னை கிரிக்கெட்டர் (காணொளி)
சென்னையைச் சேர்ந்த சனுஷ் சூர்யதேவுக்கு தற்போது இரண்டரை வயதாகிறது.
ஐந்து மாத வயது குழந்தையாக இருக்கும்போதே பொம்மைகளுக்கு பதிலாக பந்துகளை வைத்து சனுஷ் விளையாடியதாகவும், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் அவரது தந்தை கூறுகிறார்.
பட மூலாதாரம், SANUSH
தற்போது நெகிழி பந்துகளில் கிரிக்கெட் விளையாடும் சனுஷ், தொழில்முறை கிரிக்கெட்டரைப் போல அழகாக டிரைவ் ஆடுகிறார்.
இந்தியா புக் ஆஃப் தி ரெக்கார்ட்ஸ் 'இளம் குழந்தை கிரிக்கெட்டர்' என சனுஷை அங்கீகரித்திருக்கிறது.
சமீபத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் சனுஷ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்