நாளிதழ்களில் இன்று: ‘ரஜினி 33 தொகுதிகளை கைப்பற்றுவார்`

  • 17 ஜனவரி 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'ரஜினியின் கட்சி 33 தொகுதிகளை கைப்பற்றும்`

படத்தின் காப்புரிமை Getty Images

இன்னும் பெயரிடப்படாத ரஜினியின் கட்சியானது 33 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடேவும் - கார்வேவும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பானது, சட்டமன்ற தேர்தல் நடந்தால், திமுக 130 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக 68 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்றும் கூறுகிறது.

தினத்தந்தி - `ஹஜ் மானியம் ரத்து`

படத்தின் காப்புரிமை Getty Images

`ஹஜ்` மானியம் ரத்து செய்யப்பட்டது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. "ஹஜ் மானியத்துக்கு என ஒதுக்கப்பட்டு வந்த நிதி, சிறுபான்மை சமூக பெண்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும். தாஜா செய்யாமல், கண்ணியமான வகையில் முன்னேற்றத்துக்கு உதவுவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்." என்று மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாக அந்த செய்தி விவரித்துள்ளது.

தினமணி - `149 மீனவர்களை காணவில்லை`

படத்தின் காப்புரிமை Getty Images

ஒக்கி புயலில் சிக்கி காணமால் போன மீனவர்களின் இறுதி நிலவரம் குறித்து அறிய, குமரி மீனவ கிராமங்களில் மீன்வளத் துறை இயக்குனர் மற்றும் ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வு குறித்த செய்தி இடம்பிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 149 மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மாயமாகி உள்ளார்கள். குறிப்பாக, விளவங்கோடு வட்டத்தில் மட்டும் 144 மீனவர்களை காணவில்லை என்கிறது அந்த செய்தி.

தினமலர் - `என்னை கொல்ல சதி: பிரவீன் தொகாடியா`

"என் குரலை ஒடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ராமர் கோவில், விவசாயிகள் பிரச்னை, பசுவதை ஆகியவை பற்றி பேசுவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது" என விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா குற்றஞ்சாட்டி உள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்த செய்தி, என்னை கைது செய்ய, ராஜஸ்தான் போலீஸார் அகமதாபாத் வந்தனர். அப்போது, என்னை கொல்ல சதித் திட்டம் ஹீட்டப்பட்டு உள்ளதாக தகவல் வந்தது. எனவே, விமானம் மூலம், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் சென்று, நீதிமன்றத்தில் ஆஜராக முடிவு செய்தேன். விமானம் நிலையம் செல்லும் போது எனக்கு மயக்கம் வந்தது என்று தொகாடியா கூறியாதாக அந்தச் செய்தி விவரிக்கிறது.

தி இந்து (தமிழ்) - `என்ன அவர் கொள்கை`

படத்தின் காப்புரிமை தி இந்து

தி இந்து (ஆங்கிலம்) - `அடிப்படை கணிதம் தெரியாமல் தடுமாறும் 53 % இளைஞர்கள்`

மதுரையில் 14 - 18 வயதுக்கு உட்பட்ட 74.6 சதவிகித இளைஞர்கள் ஒரு வாக்கியத்தைக் கூட முழுவதுமாக படிக்க முடியாமல் தடுமாறுவதகாவும், 53 சதவிகித இளைஞர்களுக்கு அடிப்படை கணிதம் கூட தெரியவில்லை என்றும் கல்வி நிலை ஆண்டு அறிக்கையை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :