ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா ? ரஜினிகாந்த் பதில்

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

நடிகர் கமல்ஹாசன் நேற்றைய தினம் கட்சிப் பெயர் அறிவிப்பது மற்றும் சுற்றுப்பயணங்கள் குறித்து ஒரு முன்னறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் பத்திரிகையாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பினர்.

எம் ஜி ஆருடைய கொள்கைகளை தற்போதைய கட்சிகள் பின்பற்றுவதாக நினைக்கிறீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு '' அவருடைய கொள்கைகளை ஓரளவுக்கு பின்பற்றுகிறார்கள்'' என்றார் ரஜினி.

உங்களுடைய திரையுலக நண்பர் கமல்ஹாசனின் அறிவுப்பு பற்றிய உங்களின் கருத்து என்ன? அவருடைய அறிவிப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு தான் அந்த அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை என்றும் கமல்ஹாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் ரஜினி கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நீங்களும் கமல்ஹாசனும் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு ''அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்'' என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

அடுத்த சட்டமன்றத் தேர்தலை சந்திப்பேன் என கூறினீர்கள். அடுத்த ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு ''நிச்சயம் சந்திப்பேன். நன்றி'' என ரஜினி பதிலளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்