2014-க்கு பிறகு உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல், டீசல் விலை

சமீப மாதங்களில் பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆகஸ்ட் 2014க்குப் பிறகு, இப்போது நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைதான் அதிகம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்று, புதன்கிழமை, காலை 6 மணி நிலவரப்படி தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியன முறையே 71.39 ரூபாய் மற்றும் 62.06 ருபாய்க்கு விற்கப்பட்டன.

இது மும்பையில் இன்னும் அதிகமாக இருந்தது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 79.27 ரூபாய்க்கும் டீசல் 66.09 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தினம்தோறும் விலை மாற்றம் செய்யும், புதிய விலை நிர்ணய நடைமுறை அறிமுகம் செய்ய்ய்யப்பட்ட, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முறையே 7% மற்றும் 11% அதிகரித்துள்ளன.

அதற்கு முந்தைய 15 ஆண்டுகள், இரு வாரத்துக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம், ஒரு பேரலுக்கு 70 டாலராக இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க காரணம் பெர்டோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள், மற்றும் ரஷ்யா அதன் விநியோகத்தை கட்டுப்படுத்தியதும், அமெரிக்காவில் எண்ணெய் நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியும் ஆகும்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதில் மூன்றாவது இடம் வகிக்கும் இந்தியாவின் உள்நாட்டு தேவைகளில் சுமார் 70% இறக்குமதியையே நம்பியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு உண்டாகும் சுமையை குறைக்க கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எனினும், எண்ணெய் விலையேற்றம் குறைந்த காலம் நீடிக்கும் என்று மும்பையில் உள்ள ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தியாளர் கௌரங் ஷா கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :