ஒரு பெண் விலைமாதுவாக, மனைவியாக மற்றும் காதலியாக இருக்க முடியுமா? #HerChoice
'ஒரு பெண் அச்சமின்றி தன விருப்பம் போல வாழ்ந்து, பாலியல் தொழிலாளி, மனைவி, காதலி ஆகிய அனைத்திலும் ஒரே சமயத்தில் தனது அடையாளத்தை தேடுவது மனைவிகளிடம் இருந்து பாலியல் தொழிலாளிகளையும், காதலிகளிடம் இருந்து மனைவிகளையும் வேறுபடுத்தி பார்க்கும் உங்களுக்கு கோபம் வரலாம்.'
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் 'பாகி ஹூ லடுக்கியா' (ஓடிச்சென்ற பெண்கள்) எனும் கவிதையில் மேற்கண்ட வரிகளை உங்களையும், என்னையும் பற்றிதான் இந்தி கவிஞர் அலோக் தன்வா எழுதியுள்ளார்.
ஏனெனில், அச்சமின்றி பெண்கள் உலவுவது கோபத்தை உண்டாக்குகிறது. எனினும், அது இன்றும் தொடர்கிறது. ஆனால், நீங்கள்தான் உங்களை கண்களை மூடிக்கொண்டீர்கள் அல்லது வேறு பக்கம் திரும்பிக்கொண்டீர்கள்.
- ஓஷோவின் ஆரம்ப வாழ்க்கை முதல் உயில் வரை - 6 தகவல்கள்
- அந்தரத்தில் அதிர்ந்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம்
- வீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால்
அப்படி மறைந்திருக்கும் அந்த எதிர்வினை மீது சிறிது வெளிச்சம் பாய்ச்ச விரும்பினோம்.
சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யவே விரும்புகிறோம்.
அவர்கள் நம்மிடையேதான் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்கிறார்கள்.
அவர்களின் கதைகள் உங்களை அதிர்ச்சி அடையச் செய்யும் என்று உறுதி அளிக்கிறேன். இந்திய பெண்கள் பற்றிய உங்கள் புரிதலை அது கேள்வி கேட்கும்.
திருமணத்துக்குப் பிறகு தனது கணவர் ஆண்மையற்றவர் என்பதை அறிந்த பெண்ணின் கதையை உங்களிடம் பகிர்வோம்.
பாலியல் ரீதியாக அப்பெண்ணை திருப்தி அடையச் செய்ய முடியாத அந்த ஆண், அவரது உளவியல் தேவைகளையும் பொருட்படுத்தவில்லை.
சமூகத்தின் அழுத்தத்தால் அந்த ஆண் பொய் சொல்லித் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த முழுமையடையாத உறவிலிருந்த அப்பெண் என்ன செய்தார் தெரியுமா?
ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி இருக்கிறாள். அவள் பிறந்ததும், தாங்கள் விரும்பும் ஆண் மற்றும் பெண்ணுடன் வாழ அவளது தாயும் தந்தையும் சென்று விட்டனர்.
பெற்றோர் உயிருடன் இருந்தும் அனாதையாக்கப்பட்ட அந்த சிறுமி எதை விரும்புவாள்?
ஒருபால் உறவு குறித்து நிறைய விவாதிக்கப்பட்டுவிட்டது. எனினும் பல தசாப்தங்களாக ஈர்ப்பும் பாலுறவும் இல்லாமல் இரு பெண்கள் ஒன்றாக வாழ்வது உங்களுக்கு தெரியுமா?
அப்படி சுதந்திர உணர்வு மிக்க பெண்களுடன் நீங்கள் நட்பு கொள்ள விரும்புவீர்களா?
மணமுறிவு ஆன பெண்கள் ஆதரவற்றவர்கள் என்று பார்க்கப்படும் நிலையில், தனது திருமண உறவு முறிந்த பிறகு தன்னைத் தானே நேசிக்காத தொடங்கிய பெண் ஒருவர் உள்ளார்.
நாங்கள் பின்தொடர்ந்த பெண்களின் கதைகள் சுவாரசியமானவை. அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றனர்.
ஒருவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து, அக்குழந்தையை வளர்ப்பதில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
'லிவ்-இன்' உறவு மூலம் பிறந்த குழந்தையை கருவிலேயே கலைக்காமல் அதை வளர்க்க அவர் முடிவு செய்தார். அந்த உறவு முறிந்த பிறகுதான் அவர் கருவுற்று இருந்தது அவருக்குத் தெரிந்தது.
குடும்பத்தின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொண்ட பெண், தனது கொடுமைக்கார கணவரை எவ்வாறு எதிர்கொண்டார்?
தன்னை நேசிக்காத கணவரை மனைவி எவ்வாறு எதிர்கொண்டார்?
மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது குடும்பம் மற்றும் கணவர் முன்பு தன்னை எவ்வாறு நிரூபித்தார்?
குறைவான கல்வியறிவுடைய, தன் சொந்தக் காலில் நிற்கும் பெண் ஒருவர் பொறுப்பற்ற ஆண் ஒருவருடன் வாழ்ந்தார். அவர் அலைக்கும் நேரத்தில் பாலுறவுக்கு சம்மதிக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் அந்தப் பெண் என்ன செய்தார்?
இத்தகைய 12 பெண்களின் கதைகளை, வரும் வார இறுதி (சனி, ஞாயிறு) முதல் பிபிசி பதிப்பிக்கவுள்ளது.
அவர்களை பற்றி படிப்பதே அவர்களை பிரதிபலிக்கும். அந்த பிரதிபலிப்பே அதன் சாரத்தை உணர்த்தும்.
அந்தப் பெண்களுக்குள்ளும் மகிழ்ச்சி இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பிறராலும் செயல்பட முடியும் என்று அந்தப் பெண்கள் நம்புகின்றனர். அதற்கு அவர்களை புரிந்துகொள்வது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
பிற செய்திகள்
- அந்தரத்தில் அதிர்ந்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம்
- கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிரதமர்
- களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்
- ஓஷோவின் ஆரம்ப வாழ்க்கை முதல் உயில் வரை - 6 தகவல்கள்
- "கதாநாயகர்கள் வேண்டாம், தலைவர்கள்தான் வேண்டும்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்