நாளிதழ்களில் இன்று: `புற்றுநோய் குறைவு, ஆனால் இறப்பு விகிதம் அதிகம்"

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வியாழக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - `புற்றுநோய் குறைவு... ஆனால் இறப்பு விகிதம் அதிகம்"

படத்தின் காப்புரிமை Getty Images

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் புற்று நோய் தொடர்பாக ஒரு புள்ளிவிவர செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அந்த செய்தி கூறுகிறது, "இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளான டென்மார்க் மற்றும் அமெரிக்காவை விட குறைவு. ஆனால், அதே நேரம், புற்று நோய் வந்து இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்." மருத்துவ சஞ்சிகையான தி லேன்செட்டை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

தினத்தந்தி - "எப்போது இறந்தார் ஜெயலலிதா?"

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சர்ச்சை தொடர்பாக தினத்தந்தி நாளிதழ் பிரதான இடத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறது. "ஜெயலலிதாவுக்கு 2016- ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மாலையில் மாரடைப்பு வந்தது. மாரடைப்பு வந்ததும் அவர் இறந்து விட்டார் என்று நானோ, நீங்களோ சொல்ல முடியாது. டாக்டர்கள்தான் சொல்ல வேண்டும். மாரடைப்பு வந்ததும் டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவருக்கு `எக்மோ` கருவி பொருத்தப்பட்டது. அதன் பின்னர் டாக்டர்கள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று சொன்னார்கள் " என்று திவாகரன் கூறியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி பிரசுரித்து இருக்கிறது.

தினமணி - "பழையன கழிதல்"

தினமணி நாளிதழ் பழையன கழிதல் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதி இருக்கிறது. அந்த தலையங்கம் சட்டத் திருத்தம் குறித்து விளக்குகிறது. "தேவையில்லாத சட்டங்களை அகற்றி, குறைந்த அளவு சட்டங்களின் மூலம் லஞ்ச, ஊழல் இல்லாத, திறமையான சட்ட ஒழுங்கு நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதுதான் நல்லரசுக்கு அடையாளம். அதன் முதல் கட்டமாகத் தேவையில்லாத சட்டங்களை `போகி` கொளுத்து அகற்றி இருப்பதற்கு சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதுக்கு நன்றி" என்கிறது அந்தத் தலையங்கம்.

தி இந்து (தமிழ்) - `தேர்தலில் போட்டியிட்டால்`

ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தினகரன் கட்சி தொடங்குவது தொடர்பாக கார்ட்டூனை வெளியிட்டு இருக்கிறது தி இந்து தமிழ்.

படத்தின் காப்புரிமை தி இந்து

தி இந்து (ஆங்கிலம்) -`குட்காவும்... ஐ.பி.எஸ் அதிகாரிகளும்`

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக குட்கா ஊழல் தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது தி இந்து. அந்த செய்தியானது, இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட அதிகமான போலீஸார் அதிகாரிகளுக்கு குட்கா உழலில் இருக்கும் தொடர்பை சுட்டிகாட்டும் வருமான வரி துறையினரால் கைபற்றப்பட்ட ஒரு கணக்கு புத்தகம் பற்றி விவரிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :