5000 கி.மீ பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

ஐந்தாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கும் அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, ஒடிசா மாநில கடலோரத்தில், வியாழக்கிழமை காலை வெற்றிகரமாக செய்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை drdo.gov.in

தற்போது இந்தியாவிடம் இருக்கும் இத்தகைய ஏவுகணைகளிலேயே அதிக தூரம் சென்று தாக்கக்கூடியதாகவும், அதிக துல்லியத்துடன் இலக்கை அடையும் திறன் உடையதாகவும் இந்த ஏவுகணை உள்ளது.

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய திறன் உடைய இந்த ஏவுகணை, கடைசியாக ஓராண்டுக்கு முன்பு சோதனை செய்யப்பட்டது.

அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதன் மூலம், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்