நாளிதழ்களில் இன்று: விமானத்தில் செல்போன் பேச அனுமதிக்க டிராய் பரிந்துரை

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (சனிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி:

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பரிந்துரைத்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்

அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு வழக்கப்படும் எச்1பி1 விசா நடைமுறைகளில் இப்போதைக்கு மாற்றம் இல்லை என சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்ஜஸ் கூறியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Dinamalar

டைம்ஸ் ஆப் இந்தியா

படத்தின் காப்புரிமை Getty Images

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்தேறிய பிறகு அதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட நிர்பயா நிதிக்கான தனது திட்ட அறிக்கையை தமிழக அரசு ஐந்து வருடங்களுக்கு பிறகு சமீபத்தில்தான் தாக்கல் செய்துள்ளது என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரை. மேலும், ஆற்றுமணல் எடுப்பதற்கு உள்ள தடையை நீக்க மறுத்த உயர்நீதிமன்றம், சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலைகள் 25வது நாளாக மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நிலை போன்றவை இன்றைய செய்தித்தாளில் இடம்பெற்றுள்ளன.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஓராண்டில் மட்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் 115 புலிகள் இந்தியாவில் மரணமடைந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது முறையாக நூறை கடந்திருப்பதால் புலிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் உள்ளதாகவும் தினமணியின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :