ஆண்டாளை பெருமைப்படுத்த நினைத்தது தவறா? வைரமுத்து கேள்வி

ஆண்டாளை பெருமைப்படுத்த நினைத்தது தவறா? வைரமுத்து கேள்வி

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர் என்று ஒரு ஆய்வாளரை மேற்கோள் காட்டி வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையாகியுள்ளது. இந்துத்துவ அமைப்பினர் அவருக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் அவர் எழுதிய அந்தக் கட்டுரை ஆண்டாளின் தமிழைப் புகழும் நோக்கத்தில் எழுதப்பட்டது. ஒரு ஆய்வாளரை அவர் அதில் மேற்கோள் காட்டியுள்ளார் என்று ஒரு தரப்பினர் வைரமுத்துவை ஆதரிக்கின்றனர்.

தமது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் வருந்துவதாக வைரமுத்து முன்பே தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு எதிரான பிரசாரங்கள், போராட்டங்கள் தொடரும் நிலையில் தமது நிலையை விளக்கி வைரமுத்து பேசிய விடியோ ஒன்று அவரது தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காணொளி பிபிசி தமிழ் நேயர்கள் பார்வைக்கு.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :