வனத்தில் பதுங்கி வாழ்ந்த இந்தியாவின் ராபின் ஹூட்

பாபு வீரு படத்தின் காப்புரிமை SAGAR KADAV

"போர்காயோன் என்ற இடத்தில் ரன்கா ஷின்டே என்பவர் ஒரு சிறுமியை கொன்றுவிட்டார். ஆனால், அவரை கண்டு அனைவரும் அச்சம் கொண்டதால், நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் தயாராக இல்லை. நாங்கள் எங்கு போவோம். எங்களுக்கு யாருடைய ஆதரவும் இல்லை. நாங்கள் கிருஷ்ணா நதியிலும், கோயானா நதியிலும் எங்கள் உடலை சரணாகதியடைய செய்வோம். இதன் பின்னர்தான் நான் கோடரி எடுத்து ரன்காவை கொலை செய்தேன்"

தன்னுடைய முதலாவது கொலையை பற்றி விவரிக்கிறபோது பாபு வீரு வாடேகாவ்கர் இந்த கதையை கூறுவதுண்டு.

தலையில் மஞ்சள் தலைக்கட்டு, வெள்ளை தாடியும் மீசையும், கறுப்பு நிற போர்வை... இதுதான் அவருடைய பிரபல தோற்றம்.

மக்கள் இதனை யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் பலமுறை பார்த்துள்ளனர்.

சமீபத்தில் இவர் மரணமடைந்துவிட்டதால், மக்கள் "கிருஷ்ணா நதி மூலம் புலி" என்ற காணொளியில் இதனை எல்லாம் பார்த்து வருகின்றனர்.

மக்கள் அவரை "பாபு" என்று மரியாதையாக அழைப்பது வழக்கம். சிலர் வலிமையானவர் என்று பொருள்படும் வகையில், "தான்யா" என்றும் வேறு சிலர் "ராபின் ஹூட்" என்றும் அழைப்பதுண்டு.

அவர் ஏறக்குறைய 100 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருக்கு முன்னால், மக்கள் தலைகுனிந்து வணங்குவதுண்டு.

இளைஞர்கள் அவரோடு சேர்ந்து சுயப்படம் எடுத்துக்கொள்வதுண்டு.

விரிவுரை வழங்கவும் இளைஞர்கள் அவரை அழைப்பதுண்டு. பாபு வீரு வாடேகாவ்கர் வாழ்க்கை ஆச்சரியப்படவைப்பது, உற்சாகமானது.

மல்யுத்த ரசிகர் கொலைக்காரர் ஆனார்

பாபு போர்கயனில் பிறந்தவர்தான். மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியிலுள்ள சாங்லி மாவட்டத்தின் வால்வா ஹாசில்லில் உள்ள கிராமம்தான் இது.

குழந்தைப் பருவத்தில் இருந்தே மல்யுத்தம் அவருக்கு மிகவும் பிடிக்கும். மிக வலிமையாகவும் இருந்தார்.

யாராவது பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தாலா, மானபங்கப்படுத்தினாலே அவர் மிகவும் கோபமடைவார் என்று உள்ளூர் பத்திரிகையாளர் ராஜூ சானாடி தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை AMOL GAVLI

அதனால்தான் ஆயுதங்களை கையிலெடுத்து அவர் முதல் கொலையை செய்தார்.

ரன்கா ஷின்டேயை கொலை செய்தபோது, தன்னுடைய சகோதரர் பாபுவை கொல்ல முயல, பாபு தன்னுடைய சகோதரையும் கொன்றுவிட்டார்.

கைதுசெய்யப்படலாம் என்று அஞ்சி பாபு தலைமறைவானார். கிராமத்திற்கு சென்றால் காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள் என்பது அவருடைய அச்சமாக இருந்தது.

எனவே, அடர்ந்த சாக்யாடிரி காட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

அவர் குற்றவாளியாக இருந்தாலும், மக்கள் அவர் மீது அனுதாபம் வைத்திருந்தனர்.

"தம்மை பற்றி பிறர் கொண்டிருக்கும் பிம்பம் குறித்து, பாபு வீரு மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்.

அந்நேரத்தில் உத்தர பிரதேசத்தில் இருந்து பல திருடர்கள் வந்தனர். பாபு வீருவும் அவர்களை போலதான். ஒரு கிராமத்தில் ஒரு ரௌடியை அவர் கொன்றார். அதுதான் அவருடைய முதல் கொலை. அவரை பற்றிய நல்லெண்ணம் ஏற்படுவதற்கு இந்த கொலை உதவியது" என்று பல ஆண்டுகளாக கோல்காபூரில் பணிபுரிந்த மூத்தப் பத்திரிகையாளர் அனாட் திஸிட் தெரிவித்தார்.

காடுகளிலே நடமாடி வந்த அவர், திடீரென்று சில கிராமங்களுக்கு செல்வார். அங்கேயே சாப்பிடுவார்.

இதனை பின்னர் காவல்துறையினர் அறிய வருவர். காவல்துறையினர் அங்கு வருவதற்கு முன்னர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுவிடுவார். இவ்வாறு தான் கைதாவதை 25 ஆண்டுகள் அவரால் தள்ளிப்போட முடிந்தது.

படத்தின் காப்புரிமை SAGAR KADAV

கிராமங்களிலுள்ள சண்டைகளுக்கு தீர்வு கண்டு, பெண்களுக்கு அவர் உதவுவார் என்று மக்கள் கூறுகின்றனர்.

படிப்படியாக, "சுக்தேவ் காவ்லி" என்ற பெயரில் தன்னுடைய குழுவையே அவர் உருவாக்கிவிட்டார்.

"நாங்கள் 15, 20 பேர் அவரோடு இருப்போம். மூத்த சகோதரர் போல அவர் எங்களை கவனித்து கொண்டார். யாருக்காது சுகமில்லாமல் இருந்தால், அவர் பதட்டமாகிவிடுவார்" என்று சுக்தேவ் காவ்லி தெரிவிக்கிறது.

காவல்துறையினரிடம் சரணடைந்த பின்னர், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனை முடிந்த பின்னர், அவருடைய கிராமத்திற்கு வந்த அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது.

பஜன் - கீர்த்தனைகளை தொடங்கிய அவர், ஆன்மீகப் பேருரைகளை வழங்கி, மது அருந்துவதற்கு எதிராக இளைஞர்களுக்கு போதனை செய்ய தொடங்கினார்.

மேலும், குற்றவியல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருக்க இந்த இளைஞர்களுக்கு ஆலோசனை கூறினார்.

ஆயுள் தண்டனைக்கு பிறகு பாபு தன்னை பற்றி பிறர் கொண்டிருக்கும் பிம்பத்தை மேம்படுத்த முயன்றார். ஆனால், அவரது முன்தைய நிலைமையை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால், சட்டப்படி குற்றவாளி" என்று காவல்துறை அதிகாரி பீம்ராவ் சாச்சே பிபிசியிடம் தெரிவித்தார். பாபுவை கைது செய்த காவல்துறை அணியில் அவர் இடம்பெற்றிருந்தார்.

நாட்டுப்புற பாடல்கள் மற்றும் திரைப்படங்கள்

மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியிலுள்ள சங்லி மற்றும் சடாரா பிரதேசங்களிலுள்ள நாட்டுப்புற கலைஞர்கள் இவரை பற்றி கவிதைகள் எழுத தொடங்கினர்.

கிராம விழாக்களின்போது, அவருடைய கதைகள் 'தமாஷா' (நாட்டுப்புற கலை வடிவம்) வடிவில் சொல்லப்பட்டன.

படத்தின் காப்புரிமை RAJU SANADI

"கலாம்பா சிறைக்கைதி" என்ற வாகானாட்யா (நாடக கலை வடிவம்) மிகவும் பிரபலமாகியது.

பாபுவின் வாழ்க்கை பற்றி இந்த நாடக கலை வடிவத்தை ராமசந்திரா பான்சோடே எழுதியிருந்தார்.

"என்னுடைய கணவர் ராமசந்திரா பான்சோடே, பாபு வீரு வாடேகாவ்கரை சிறையில் சந்தித்தார். அவருடைய வாழ்க்கை கதை முழுவதையும் கேட்டு இந்த நாடகத்தை எழுதினார்" என்று மங்களா பான்சோடே தெரிவித்துள்ளார்.

"உண்மையான கதைகளை அடிப்படையாக கொண்டு எங்களுடைய நாடகங்களை அரங்கேற்றுவது வழக்கம். நாட்டுப்புறப் பகுதிகளில் இந்த கலை வடிவம் மிகவும் தேவைப்பட்டது.

எனவேதான் பாபு வீரு வாடேகாவ்கரை பற்றி நாடகம் எழுத வேண்டும் என்று எனது கணவர் எண்ணினார். இந்த நாடகத்தை அரகேற்றியபோது, பார்வையாளர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.

இந்த நாடகத்தை பார்க்க 5 முதல் 6 ஆயிரம் பேர் கூடுவதுண்டு. கரவொலிகளாலும், விசில் அடித்தும் மக்கள் உற்சாகப்படுத்துவர்" என்று அவர் நினைவுகூர்ந்தார்.

அவருடைய வாழ்க்கை பற்றி "பாபு வீரு வாடேகாவ்கர்" என்ற பெயரில் ஒரு திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பாபுவின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மிவின்ட் குனாஜி நடித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்