நாளிதழ்களில் இன்று: "12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்தால் மரண தண்டனை "

  • 21 ஜனவரி 2018
படத்தின் காப்புரிமை iStock

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி:

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு இந்திய வீரர்கள் பலியானதால் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்த செய்தி தினமணியில் பிரதான இடத்தை பெற்றுள்ளது. மேலும், இந்தாண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையே பின்பற்றவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மற்றும் மனித இனம் தோன்றியது தொடர்பான உயிரியல் அறிஞர் சார்லஸ் டார்வினின் கோட்பாடே தவறானது என்று கூறிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணையமைச்சர் சத்யபால் சிங் பற்றிய செய்தி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

டைம்ஸ் ஆப் இந்தியா:

சென்னையிலுள்ள தமிழக அரசின் எலைட் மதுபான கடைகளில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் வாங்கப்படும் மதுபானங்களுக்கு அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக திறன்பேசி ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்ற செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ளது. மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அதன் பிறகு இரண்டு முறை மட்டுமே தேர்ச்சி பெறாத பாடங்களில் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற செய்தியும், ஹரியானாவில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் பள்ளி தலைமையாசிரியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற செய்தி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

தினமலர்:

தமிழக அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தினமலர்.

படத்தின் காப்புரிமை DINAMALAR

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஹைதராபாத்தில் பள்ளிப் பேருந்திலிருந்து தவறி விழுந்து பேருந்து மேலே ஏறியதால் பலியான ஒன்றாம் வகுப்பு சிறுமி பற்றிய செய்தியும், ஹரியானாவில் 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளது உள்ளிட்ட செய்திகள் இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இடம்பெற்றுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :