நீட் தேர்வு: "மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவது அரசுக்கு அழகல்ல"

இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படியே `நீட்` தேர்வு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

படத்தின் காப்புரிமை MANPREET ROMANA/Getty Images

இது தொடர்பாக, இது பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் மாநிலங்களின் உரிமையை நசுக்கும் முயற்சியா? நாடு தழுவிய அளவில் தரத்தை நிலைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையா? என்று வாதம் விவாதம் பகுதியில் பிபிசி நேயர்களிடம் கேட்டு இருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

சரோஜா பாலசுப்ரமணியன் சொல்கிறார், "நீட் தேர்வு தரத்தை மேம்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை . ஆனால் நீட் தேர்வை கொண்டு வருவதற்கு முன், நாடு முழுவதும் ஒரே பாட திட்டத்தை கொண்டு வர வேண்டியது அவசியம். மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவது அரசுக்கு அழகல்ல."

"நீட் தேர்வின் மூலம் மாநில உரிமை நசுக்கப்படுவது மட்டும் அல்லாமல் மாணவர்கள் அரசு பள்ளியில் படிப்பதை நிறுத்தி CBSE கல்வியை திணிப்பதற்கான முயற்சி இது" என்கிறார் ஷேக் ஜமுனா கான்.

புலிவலம் பாட்ஷாவின் கருத்து: "மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய இத்தனை போராட்டங்களை கண்டுக்கொள்ளாத மத்திய அரசின் நடவடிக்கை செவிடன் காதில் சங்கு ஊதியது போல் ஆகிவிட்டது."

"CBSE பாட திட்டத்தை அனைவரும் பின்பற்றலாமே. அதுவே தீர்வு" என்பது அருண் பிரவின் பிரசாத்தின் கருத்து.

ரமேஷ் நாராயண், "சர்வாதிகார மேலாதிக்கத்தின் வெளிப்பாடே...வேறு என்ன சொல்வதற்கு?" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்