வாதம் விவாதம்: ''மதவாதமும் வளர்ச்சியும் ஒரே வழியில் பயணிக்க முடியாது"

உலக பொருளாதார கூட்டமைப்பின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பட்டியலில் இந்தியா 62-வது இடத்தில் உள்ளது.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

இது குறித்து, இது இந்திய அரசின் தோல்வியா? ஏற்கனவே உள்ள சமூக காரணிகள் வளர்ச்சியைப் பாதிக்கின்றனவா? என வாதம் விவாதம் பகுதியில் பிபிசி நேயர்களிடம் கேட்டு இருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

''பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது என்னும்போது மிகவும் வேதனையாகத்தான் உள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, ஆகியவற்றின் எதிரொலியாகக் கூட இது இருக்கலாம். வரும் வருடங்களில் இந்தியா முன்னேறும் என்று நம்பலாம்'' என முகநூலில் பிபிசி தமிழ் பக்கத்தில் பின்னூட்டம் ஒன்றில் எழுதியுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

''எல்லா சேமிப்பு கணக்கு வட்டிவிகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சேமித்த பணத்தை அரசிடமிருந்து காப்பதே பெரும் பாடாய் இருக்கிறது. தொழிலாளர்களின் வைப்பு நிதியில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளது இந்த அரசு. சேமிப்பை ஊக்குவிக்காமல் செலவு செய்யும் நுகர்வை ஊக்குவிக்கும் அரசு இது. சேமிப்புதான் இவ்வளவு வருடங்களாக இந்தியாவை உலகச் சூழல்களிலிருந்து காத்தது'' என தனது கருத்தை பதிவு செய்துள்ளார் விக்னேஸ்வரன் முத்துக்கிருஷ்ணன்.

''உள்நாட்டு வளர்ச்சி மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்த இந்திய அரசு தவறிய காரணத்தால் தான் இந்தியா பொருளாதாரத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது,இதில் முக்கியமான விசயமாக கருதப்படவேண்டியது ஜிஎஸ்டி என்ற பெரிய அரக்கனை மக்கள் தலையில் ஏற்றியத்தின் விளைவாக சிறு தொழில்கள் நலிந்து போனதால் உற்பத்தி குறைந்து போனது'' என எழுதியுள்ளார் புலிவலம் பாஷா.

முகநூலில் பிபிசி பக்கத்தில் பின்னூட்டமொன்றில் கணேஷ் ஜி இவ்வாறு எழுதியுள்ளார் ''இது மக்களின் அரசு அல்ல .கார்ப்பரேட்களின் அரசு. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா முழுமையும் தனியார்மயமாகும் இது உறுதி''.

''350 ருபாய்க்கு இருந்த கேஸ் இப்போது 850 ருபாய். மூன்று ருபாய்க்கு இருந்த பஸ் கட்டணம் இப்போது 9ருபாய்.10 ருபாய்க்கு விற்ற வெங்காயம் இப்போது 100 ருபாய். எங்கே போய்க் கொண்டிருக்கிறது இந்தியா? இதையேல்லாம் யார்தான் கேட்பது'' என ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார் தென்றல் சாகுல்.

''மக்களின் தோல்வி. சரியானவர்களை தெரிவுசெய்யத் தவறுதல்'' என இந்த விவகாரம் குறித்து பதிவு செய்துள்ளார் வேலாயுதம் கந்தசாமி.

பிபிசி தமிழ் நேயர் வெற்றி ''தேசம் தனக்குள் ஒன்றுபடாதவரை எந்தவளர்ச்சியையும் பார்க்கமுடியாது ; மதவேறுபாடு அரசியலில் இருக்கும்வரை தேசம் தனக்குள் ஒன்றுபடாது . அரசின் மூடத்தனமான முடிவுகளால் வந்த தோல்வி இது'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்