ஒன்று உண்மை குற்றச்சாட்டு, இன்னொன்று உருவகப்படுத்திய குற்றச்சாட்டு: பொன்.ராதாகிருஷ்ணன்

''தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழர்களை பிரிக்க சிலர் முயற்சி''

ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காதது ஆகியவை உருவாக்கிய சர்ச்சைகளைப் பற்றி கேள்வி கேட்டபோது, ஒன்று உண்மையான குற்றச்சாட்டு என்றும் மற்றொன்று உருவாகப்படுத்திய குற்றச்சாட்டு என்றும் குறிப்பிட்டார் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலமான நாங்குநேரியில் இந்தியா ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர்.

ஒகி புயலில் காணாமல் போன இரு மாநில மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், இந்திய கடற்படையினர் ஒவ்வொரு நாளும் ஆழ்கடலுக்கு சென்று மீனவர்களைத் தேடிய போது, அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்றும், எல்லா நாட்களும் இதே நிலை நீடித்தததால் மீட்பு முயற்சிகள் நிறைவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளுக்குள்ளான வைரமுத்து மற்றும் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் விவாகரம் குறித்து மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழர்களை பிரிக்க வேண்டும் என்று கருதி சிலர் முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும், உண்மையான தவறு சுட்டிக்காட்டப்பட்ட நேரத்தில் உருவகப்படுத்தப்பட்ட தவறு ஒன்று உருவாக்கப்பட்டு பிரச்சினை திசைதிருப்பப்பட்டதாக கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்