“உரிய நேரத்தில் கிடைக்காவிட்டாலும் தகுதியானவர்களுக்கே விருது”

இந்திய அரசின் பத்ம விருதுகளால் வழங்கப்படும் அங்கீகாரம், தகுதியானவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கிறதா? விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா?

படத்தின் காப்புரிமை Facebook

இந்த கேள்வியை பிபிசி தமிழின் ‘வாதம் விவாதம்‘ பகுதியில் வெளியிட்டு, நேயர்கள் தங்களின் பதிவுகளை வெளியிடுவதற்கு கேட்டிருந்தோம்.

இது தொடர்பாக, பிபிசி தமிழ் நேயர்கள் சமூக வலைதங்களில் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

சரோஜா பாலசுப்பிரமணியன் என்கிற நேயர், “தகுதியானவர்களுக்கு விருது என்பது முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பெரும்பாலும் கட்சி சார்ந்த அல்லது கட்சி ஆட்களால் சிபாரிசு செய்யப்பட்ட, உள்நோக்கத்தோடு கூடிய ஆட்களுக்கே விருதுகள் வழங்கப்படுகின்றன. திறமையிருந்தும் விருது கிடைக்காத எத்தனையோ பேர் நம் நாட்டில் இருக்கின்றனர்” என்று ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நாகராஜ் காளிமுத்து என்ற நேயர் ஃபேஸ்புக் பதிவில், “எப்போதும் தகுதியானவர்க்கும் உரிய நேரத்திலும் வழங்கப் படுவதில்லை. அப்படி வழங்கப்பட்டதாக நாம் எண்ணும் தருணங்களின் பின்புல அரசியல் அருவருப்பானதாக உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தகுதியானவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்காவிட்டாலும் தகுதியானவர்களுக்கு தான் இதுவரை வழங்கபட்டு உள்ளது. இந்த விருதுகளுக்கு பலர் புகழும் சேர்த்துள்ளனர் என்று முத்துசெல்வன் பிரேம் கருத்து பதிவிட்டுள்ளார்.

புலிவாலாம் பாஷா என்ற நேயர், “மத்திய அரசுக்கு சாதகமாக நடந்துக்கொண்டால் மட்டுமே விருதுகள் கிடைக்கும், தகுதிக்கான விருதுகள் இப்போதைய அரசியல் சூழ்நிலையில் கிடைக்க வாய்ப்புகள் இல்லை!!! என்கிறார்,

பாரபட்சமேயன்றி வேறில்லை... என்பது சிவகுமாரின் கருத்து.

ரமேஷ் சுப்பிரமணி என்ற நேயரோ, இந்தியாவில் தகுதியானவர்களுக்கு எப்போது விருது வழங்கப்பட்டது??? உள்நோக்கத்தோடும், அரசியல் நோக்கத்தோடும் மட்டுமே வழங்கப்படுகிறது... என்று ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெறும் நானம்மாள், 98 வயதிலும் யோகா செய்யும் வீடியோ

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கோயம்புத்தூரைச் சேர்ந்த 98 வயது யோகா பாட்டி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்