ஜீயரின் சோடா பாட்டில் பேச்சு: சமூக வலைத்தளத்தில் கிண்டல் மழை

எங்களுக்கும் சோடாபாட்டில் வீசத் தெரியும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் நாமக்கல்லில் பேசிய கருத்தை எதிர்த்து அரசியல் தலைவர்களும் சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்களும் கண்டித்தும், கிண்டல் செய்தும் எதிர்வினையாற்றிவருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Facebook

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் பெருமைகளைப் பேசும் தமது கட்டுரை ஒன்றில், ஆண்டாள் தேவரடியார் குலத்தில் பிறந்தவர் என்று கூறப்படும் ஓர் ஆய்வை மேற்கோள் காட்டியிருந்தார் வைரமுத்து. இதை கண்டித்துப் பேசிய பாஜக தேசிய செயலாளர் மோசமான மொழியில் வைரமுத்துவையும் அவரது தாயையும் வசை பாடியிருந்தார். இது வார்த்தை மோதலாக உருவெடுத்த நிலையில், முதலில் தம் பேச்சு மற்றவர்களைப் புண்படுத்தியிருந்தால் வருந்துவதாகத் தெரிவித்தார்.

ஆனால், எதிர்ப்பாளர்கள் மோசமான வசைகளை இணையத்தில் பதிவேற்றிய நிலையில் மீண்டும் விளக்கம் அளித்த வைரமுத்து, தாம் ஆண்டாள் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், அவரது புகழ்பாடவே ஆசைப்பட்டதாகவும், சமூக ஆய்வு நோக்கிலும் அவரைப் பார்த்ததாகவும் விளக்கம் கூறி விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் வைரமுத்து ஆண்டாள் சந்நிதியில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் வைரமுத்துவை கண்டித்து நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய ஜீயர், மீண்டும் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்திப் பேசியதுடன், ஆண்டாள் தொடர்பாக கொளத்தூரில் நடத்தத் திட்டமிட்டுள்ள விவாதம் குறித்துப் பேசினார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

அப்போது, "கொளத்தூரில் மட்டுமல்ல உலகத்தில் எந்த ஊரிலும், எந்தக் கடவுளையும் ரோட்டோரத்தில் மேடை போட்டு பேசக்கூடாது" என்று கூறிய அவர், சாமியார்களெல்லாம் இவ்வளவு நாள் சும்மா இருந்ததாகவும், இனிமேல் தங்களாலும் கல்வீசவும், சோடாபாட்டில் எடுக்கவும் முடியும் என்றும் பேசினார்.

இது பற்றி கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "ஜீயர் ஆவதற்கு அடிப்படைத் தகுதி ஜாதி மற்றும் பிற பண்புகள் முக்கியம் என்று எண்ணியிருந்தேன். சோடா பாட்டில் வீசவும், கல் எறியவும் தெரிந்தால் போதும் போல் தெரிகிறது," என்று கூறியுள்ளளார்.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது கனிமொழி இவ்வாறு கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சடகோப ராமானுஜ ஜீயரின் கருத்தை கண்டித்திருப்பதோடு, அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரனும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ ஜீயர் நல்ல பொருளில்தான் பேசியிருப்பார் என்றும், தவறான எண்ண வேண்டாம் என்றும் கூறியதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் பேசியதை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களையும், மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் டிவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து.

பிற கிண்டல் மீம்கள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்