தடை அதை உடை; சேலத்தில் 70 ஆண்டுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

தடை அதை உடை; சேலத்தில் 70 ஆண்டுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பகுதியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஜல்லிகட்டு போட்டி பற்றிய காணொளி. ஜல்லிக்கட்டிற்கு விதிக்கபட்டிருந்த தடையின் காரணமாக ஏழு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தன. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்ததன் பேரில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் விமர்சையாக நடந்தது.

இந்தப் போட்டியின் இறுதியில் அதிக அளவிலான மாடுகளை அடக்கிய தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அருண் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

சிறப்பாக மாட்டைப் பராமரித்தற்காக, யாராலும் அடக்கமுடியாமல் இருந்த மாட்டின் உரிமையாளரான இலங்கை ஊவா மாகாணத்தின் அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு முதல் பரிசாக ஆல்டோ கார் அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :