மக்கள் போராட்டம் எதிரொலி: உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைப்பு

அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வரும் சூழ்நிலையில், தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது.

சாதாரண பேருந்து கட்டணம் 10 கிலோமீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைத்துள்ளது.

விரைவுப் பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், அதிசொகுசு பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும் அதி நவீன சொகுசு பேருந்து கட்டணம் 30 கிலோமீட்டருக்கு 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் அரசு குறைத்துள்ளது.

குளிர்சாதனப் பேருந்துக் கட்டணம் 30 கி.மீக்கு 140 பைசாவிலிரிந்து 130 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை DPIR
படத்தின் காப்புரிமை DIPR

இந்த குறைக்கப்பட்ட பேருந்துக் கட்டணத்தை ஏற்று மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டுமென்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்த குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்