நாளிதழ்களில் இன்று: பத்ம விருதுகளில் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது: மோதி

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - `பத்ம விருதுகளில் வெளிப்படைத்தன்மை`

பட மூலாதாரம், Getty Images

சமூகத்திற்கு அசாத்திய பங்களிப்பு அளித்த சாமானியர்களுக்கு இந்த ஆண்டு பத்ம விருது அளித்து கெளரவிக்கப்பட்டு இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மான்-கீ-பாத் உரையில் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அவர், "முன்பு பத்ம விருதுகளுக்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு சில முறைகள் கையாளப்பட்டன. ஆனால், இவை இப்போது மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. வெளிப்படைத்தன்மை அதில் கொண்டுவரப்பட்டுள்ளது` என்று மோதி பேசியதாக விவரிக்கிறது அந்த செய்தி.

தினத்தந்தி - `முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை`

பட மூலாதாரம், Getty Images

முத்தலாக் மசோதா குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. "பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் நிலையில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றுவதில் அனைத்துகட்சிகளுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படும்` என நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் ஆனந்தகுமார் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதுபோல, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைப்பு குறித்த செய்தியும், காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி அரசியல் கட்சிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டமும் தினத்தந்தி நாளிதழில் பிரதான இடத்தை பிடித்துள்ளன.

தினமலர் - `ஒகி: 4.5 லட்சம் சதுர மைல் பரப்பில் தேடுதல் வேட்டை`

பட மூலாதாரம், Getty Images

ஒகி புயலின் போது காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் 4.5 லட்சம் சதுர மைல் பரப்பளவில் நடந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 30 ஆம் தேதி ஒகி புயல் தாக்கியது. திடீரென உருவான இந்தப் புயல் குறித்து முன் கூட்டியே கணிக்க முடியவில்லை. அதனால் தமிழகம் கேரளாவில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிக்கினர். கடற்படை உடனடியாக களமிறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டது. 4.5 லட்சம் சதுர மைல் பரப்பில் இந்த தேடுதல் வேட்டை நடந்தது என கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியதாக விவரிக்கிறது அந்த செய்தி.

தி இந்து (தமிழ்) - `வேடிக்கை பார்ப்பது அரசின் வேலையல்ல!`

பட மூலாதாரம், Getty Images

வேடிக்கை பார்ப்பது அரசின் வேலையல்ல என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து (தமிழ்) நாளிதழ். அதில், பத்மாவத் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள இடர்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அந்த தலையங்கம், "உச்சநீதி மன்றம் திரைப்படத்தைத் திரையிட அனுமதி தந்ததுடன், மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியது. இவ்வளவுக்குப் பிறகும் பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இப்படத்தை திரையிடும் சூழலை அம்மாநில அரசுகள் உருவாக்கவில்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக யார் அச்சுறுத்தினாலும், அணி திரட்டினாலும் சட்டம் - ஒழுங்கு கெடாமல் பாதுகாக்க வேண்டிய தனது கடமையை நான்கு மாநில அரசுகளும் கைவிட்டுவிட்டதையே இது கட்டுகிறது." என்கிறது அந்த தலையங்கம்.

அதுபோல, கமல் நோட்டா குறித்து கூறிய கருத்து தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ்.

பட மூலாதாரம், தி இந்து

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - `வேம்பு... நல்லது`

பட மூலாதாரம், Getty Images/ AFP

வேம்பு கொண்டு பல் துலக்குவது, பாக்டீரியாவை கட்டுபடுத்தும் என ஸ்ரீ ராமசந்திர மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆய்வு தெரிவிப்பதாக இந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: