வாதம் விவாதம்: ''நடப்பது நடக்கட்டும், இதன் மூலம் போலியான நபர்களைக் கண்டறிய முடியும்''

நடப்பது நடக்கட்டும்; இதன் மூலம் போலியான நபர்களைக் கண்டறிய முடியும்

அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் பொதுவெளிகளில் நாகரீகமற்று பேசும் கலாசாரம் பெருகி வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இன்றைய அரசியலில் வார்த்தை போர் எல்லை மீறுவது தவிக்க முடியாததா? அல்லது அரசியல் ஆதாயம் தேட இம்மாதிரியான பேச்சுக்கள் திட்டமிட்டே வெளிப்படுத்தப்படுகிறதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''ஒருசாராரிடம் இருந்து தொடர்ந்து எழும் நேர்த்தியற்ற, உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் விமர்சனங்களுக்கு, எதிர் தரப்பினர் இடம் தகுந்த தரவுகள், தன் நிலைதவறாத, அறிவுசார் கருத்துக்கள் சாதுரியமாக எடுத்துரைக்கும் ஆற்றலின்மை இல்லாத காரணங்களால் தரம் தாழ்ந்த, நாகரீகமற்ற சொற்கள், இன்றைய அரசியல் களத்தில் வரம்புகள் கடந்து செல்கின்றது'' என கூறுகிறார் சக்தி சரவணன் எனும் நேயர்.

''சமீபகாலமாக நடந்து வரும் வார்த்தைபோர் பாஜக தமிழகத்தில் காலுன்ற வைக்கும் சதியே. பொதுவாக மதக்கலவரம் மூலமே ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் தமிழகத்தில் அதற்கு வழியில்லை என்பதால் கருத்துவேறுபாட்டை உருவாக்கி காலுன்ற முயல்கின்றது. அதன் விளைவே நேற்றுவரை மரியாதையா வாழ்ந்து வந்த ஜீயர்கள் கூட இன்று சோடாபாட்டில் சைக்கிள் ஜெயினை எடுக்க போவதாக பேசுகின்றனர்'' என்கிறார் முகமது சித்திக்.

''நாட்டின் முன்னேற்றத் திட்டங்கள் கருத்தில் கொண்டு விவாதித்த காலம் போய் இப்போது தனது ஜாதி மத இன அடையாளங்களை மையப்படுத்தி அரசியலில் பிரதிபலிக்கவே முயற்சி செய்கின்றனர். தற்போது இவைதான் மக்கள் இடத்தில் தான் யார் என்பதை அடையாளமும் அறிமுகம் கிடைக்க வைக்கின்ற எளிய வழியாகப் போய் விட்டது. ஆனால் இது ஒரு போதும் சரியான தீர்வை தராது மேலும் குழப்பங்களையே ஏற்படுத்தும் என்பதை எப்போது உணர்வார்கள்?'' என கேட்டுள்ளார் ரஹ்மாத்துல்லா.

''என்ன விதைக்கிறானோ, அதை அறுவடை செய்கிறான்'' என பதிவிட்டுள்ளார் ஜோய் எனும் நேயர்.

''வார்த்தைகளில் கட்டுப்பாடு இல்லாதவன் மத, அரசியல் தலைவனாக இருக்க முடியாது. அரசியல் ஆதாயம் தேடத்தான், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறார்கள். இது மலிவான ஆபத்தான அரசியல் போக்கு. மக்கள் அவர்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்'' என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.

''எல்லாம் ஒரு மலிவான விளம்பரம் தான்.. அப்ப.. அப்ப.. நான் ஒருத்தன் இருக்கேன்னு அப்டேட் செஞ்சுக்குவாங்க. மக்களுக்கு அவசியம் இல்லையென்றாலும்.. அது தான் இன்றைய அவர்களின் நிலைப்பாடு'' என்கிறார் வசந்த குமார்.

''மதவாதம்,இனவாதம், மொழிவாதம் இதை கொண்டு மக்கள் பயன் அடையவில்லை , மதவாதிகளும், அரசியல்வாதிகளும் மட்டுமே பயன் அடைகிறார்கள் !!'' என கூறியுள்ளார் புலிவளம் பாஷா.

'' நடப்பது நல்லது தான். இதன் மூலம் போலியான நபர்களைக் கண்டறிய முடியும்'' என்கிறார் சந்தோஷ் குமார்.

''ஆதாயம் ஏதும் இல்லை. அவமானம் தான் கிடைக்கும்.'' என்கிறார் அம்மா என்ற பெயரில் இயங்கும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்