நாளிதழ்களில் இன்று: பத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: பத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா

படத்தின் காப்புரிமை Getty Images

பத்மாவத் திரைப்படத்தை மலேசிய தணிக்கைத் துறை தடை செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். "இஸ்லாமிய உணர்வுகளை இத்திரைப்படம் புண்படுத்துவதால், இத்திரைப்படத்தை மலேசிய தணிக்கை அமைப்பு தடை விதித்துள்ளது." என்கிறது அந்தச் செய்தி. படத்தின் விநியோகஸ்தர் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், திரைப்பட முறையீட்டுக் குழு முன் இன்று அது விசாரணைக்கு வருவதாகவும் விவரிக்கிறது அந்தச் செய்தி.

தி இந்து (தமிழ்) - `தொடரும் தற்கொலை`

படத்தின் காப்புரிமை Getty Images

`கருகி மடிகிறது விவசாயிகளின் வாழ்வு` என்ற தலைப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் எழுதிய கட்டுரையை நடுப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ்."2016-ல் வறட்சியின் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதையும், அதிர்ச்சியால் மாண்டதையும் உலகறியும். இந்நிலையில், இந்த ஆண்டு பயிர்செய்தும் கடைசி நேரத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பயிர்கள் கருகிவிடும் என்றால், அந்த இழப்புகளை விவசாயிகளால் தாங்கவே முடியாது. எனவே, கருகும் பயிரைக் காப்பாற்ற தண்ணீர் பெற்றுத்தந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமை." என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரித் நீர் தொடர்பான கேலி சித்திரத்தை வெளியிட்டுள்ளது தி இந்து தமிழ் நாளிதழ்

படத்தின் காப்புரிமை The hindu Tamil

தினமணி - `மாட்டு வண்டி ஓட்டிய முதல்வர்`

படத்தின் காப்புரிமை Dinamani

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மாட்டு வண்டி ஓட்டிய செய்தியை பிரசுரித்துள்ளது தினமணி நாளிதழ். "கச்சா எண்ணெய் பேரல் விலை தற்போது 68 டாலராகதான் உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 124 டாலராக விற்றபோதே, ரூ 60-க்கு தான் பெட்ரோல் விலை இருந்தது. மக்கள் தலையில் சுமையை அதிகளவில் ஏற்றி வைக்கிறது மத்திய அரசு" என்று முதல்வர் நாராயணசாமி பேசியதாக விவரிக்கிறது அந்த செய்தி.

தினமலர் - 'ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடையா?'

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ். "கடலோர ஒழுங்கு முறை மண்டல பகுதியில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடையில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது" என்று அச்செய்தி கூறுகிறது.

தி இந்து (ஆங்கிலம்) - '412 நீட் பயிற்சி மையங்கள்'

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள 412 அரசு நீட் பயிற்சி மையங்கள் வரும் வாரங்களில் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்