#Budget2018: 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ பாதுகாப்பு

நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம், TWITTER

2018-19 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு பயன்படும் வகையில், தேசிய சுகாதார திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பட்ஜெட் குறித்து பிபிசி தமிழ் வழங்கிய நேரடி தகவல்களின் தொகுப்பு.

12.45: பட்ஜெட் எதிரொலியால் பங்குச்சந்தை 1.25% அளவுக்கு சரிவடைந்துள்ளது

12:30: 2017-18ஆம் ஆண்டில் நேரடி வரியில் 12.6சதவீதமும், மறைமுக வரியில் 18.7சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கில் எந்தவித மாற்றமும் இல்லை

பணமதிப்பிழப்பால், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

12:16: சட்டவிரோத பண பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படும் கிரிப்டோ கரன்சியை ஒழிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.. கிராமப் பகுதியில் இணைய வசதிக்காக 5 லட்சம் வை ஃபைஅமைக்கப்படும்.

12:05: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்படும்.

செளபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி மின் இணைப்புகள் வழங்கப்படும்.

12:01:விமானநிலையங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக உயர்த்த திட்டம்.

11:56: காச நோயாளிகள் நலனுக்காக 600 கோடி ஒதுக்கீடு. 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு பயன்படும் வகையில், தேசிய சுகாதார திட்டம் தொடங்கப்படும்.

11:45: பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கென ’ஏகலைவா’ பள்ளிகள் தொடங்கப்படும்.

11:40: ஒவ்வொரு மூன்று பாராளுமன்ற தொகுதிக்கும் ஒரு மருத்துவ கல்லூரி இருப்பது உறுதிசெய்யப்படும். நாடு முழுவதும் 24 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். 1000 சிறந்த பொறியியல் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் ஐஐடி மற்றும் என்ஐடி யில் முனைவர் பட்டம் பயில உதவிகள் வழங்கப்படும்.

11:30: 8 கோடி ஏழை பெண்களுக்கு சிலிண்டர்கள் வழங்கப்படும். மூங்கில் மரங்கள் வளர்ப்புக்காக 12,900 கோடி ஒதுக்கீடு.டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படும், உற்பத்தி துறை வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஏற்றுமதி விகிதம் 15 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஜேட்லி.

11:20: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு பிறகு மறைமுக வரிகள் சுலபமானதாக ஆக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறுவியதால், உலகளவில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது.

2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். என்று தனது உரையில் தெரிவத்துள்ளார் ஜேட்லி.

11:10: தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்கிய அருண் ஜேட்லி, அவ்வப்போது ஹிந்தியிலும் பேசி வருகிறார்.

ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதாலும், இந்த அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதாலும் இந்த பட்ஜெட் அதிகம் கவனிக்கப்படுகிறது.

இன்று 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி முன்னதாக குடியரசு தலைவரை அவரது மாளிகையில் சந்தித்தார்.

பட்ஜெட் சில சுவாரஸ்ய தகவல்கள்

1947 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை,

87 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

25 மத்திய நிதி அமைச்சர்களை சுதந்திர இந்தியா கண்டுள்ளது

4 நிதி அமைச்சர்கள் பிரதமராகி உள்ளனர். அவர்கள், மொரார்ஜி தேசாய், சரண் சிங், விபி சிங், மற்றும் மன்மோகன் சிங்.

2 நிதி அமைச்சர்கள் குடியரசு தலைவராகி உள்ளனர். அவர்கள், ஆர். வெங்கட்ராமன் மற்றும் பிரணாப் முகர்ஜி.

இந்நிலையில், பட்ஜெட் குறித்து உடனடி தகவல்களை பிபிசி தமிழில் தொகுத்து வழங்க உள்ளோம்.

இன்று தாக்கல்செய்யபட இருக்கும் மத்திய பட்ஜெட்டில் எய்ம்ஸ் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது பகுதியை தமிழகம் எதிர்பார்ப்பதாக கூறுகிறது தி இந்து ஆங்கில நாளிதழ். கடந்த ஆண்டு தமிழகத்திற்கென பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததால் தமிழகம் ஏமாற்றம் அடைந்தது என்கிறது அந்த நாளிதழின் செய்தி.

மீள்: சென்ற ஆண்டு பட்ஜெட்:

சென்ற ஆண்டு பட்ஜெட் உரையில் அருண் ஜெட்லி, "இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மேலும், நாட்டை சீரழித்து வந்த கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது.உற்பத்தி துறையில் உலகின் 6-ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது'' என்று தெரிவித்து இருந்தார்.

பட்ஜெட் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 5 விடயங்கள்

பட மூலாதாரம், Getty Images

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.இந்நிலையில், பட்ஜெட் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 5 விடயங்கள் என்ன?

பட்ஜெட் பற்றி மாத ஊதியம் வாங்கும் இவரது கருத்து என்ன?

காணொளிக் குறிப்பு,

பட்ஜெட் பற்றி மாத ஊதியம் வங்குவோரின் கருத்து என்ன?

இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட்டில் மாத ஊதியம் வாங்குவோர் என்ன எதிர்பார்க்கின்றனர் என்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பட்ஜெட்டில் இந்த முடிதிருத்தும் தொழிலாளியின் எதிர்பார்ப்பு என்ன?

காணொளிக் குறிப்பு,

பட்ஜெட்டில் இந்த முடிதிருத்தும் தொழிலாளி எதிர்பார்ப்பதென்ன?

உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் இவையே இவரது கவலை. இது அவர் பேசும் காணொளி.

பட்ஜெட் எதிர்பார்ப்பு: "கைம்பெண்களுக்கு அரசு அதிகமாக உதவ வேண்டும்"

காணொளிக் குறிப்பு,

கைப்பெண்ணுக்கு அரசு அதிகமாக செய்ய வேண்டும் - வீட்டுப் பணிப்பெண்

பட்ஜெட் சிறப்புக் கட்டுரை: இந்திய ராணுவத்தின் போதாமைகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர சலுகைக்கு செலவிடப்படுகிறது. ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான தொகை மிகவும் குறைவாகவே இருக்கும் நிலையிலும் கடந்த ஆண்டு ராணுவ பட்ஜெட்டில் 6,886 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு பற்றி அலசும் தொடர்.

மோதி அரசின் கடைசி பட்ஜெட் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்குமா?

பட மூலாதாரம், Getty Images

நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பிப்ரவரியில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தேர்தலுக்கு பிறகு பொறுப்பேற்கும் அரசு 2019-20ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 - 7.5 சதவீதமாக அதிகரிக்கும்

2018- 19 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) 7 - 7.5 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :