ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: விசாரணை எப்போது முடியும்?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: விசாரணை எப்போது முடியும்?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பான விசாரணை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த விசாரணை முடிய இன்னும் ஒராண்டிற்கு மேலாகும் எனவும் விசாரணை கமிஷன் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டங்களின் இறுதி நாள் நடந்த வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வரும் இந்த கமிஷன் , கோவையில் மூன்றாம் கட்ட விசாரணையை இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதிவரை நடத்துகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்