இடைத்தேர்தல்: 5 இடங்களிலும் பாஜக தோல்வி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதிக்கும், ஆல்வார் மற்று அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆல்வாரில் காங்கிரஸ் வேட்பாளர் கரன் சிங் யாதவ் மற்றும் அஜ்மீரில் அக்கட்சியின் ரகு சர்மா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதியில் காங்கிரசின் விவேக் தாக்கர் வென்றுள்ளார்.

இந்த மூன்று இடங்களும், இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவிடம் இருந்த தொகுதிகளாகும். அத்தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவைத் தொடர்ந்து அங்கு ஜனவரி 29 அன்று இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் உலுபேரியா மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சஜ்தா அகமத் 4.74 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு பாரதிய ஜனதா வேட்பாளர் இராண்டாம் இடமும், இடதுசாரி வேட்பாளர் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

அம்மாநிலத்தில் நோபாரா சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் சிங் வெற்றி பெற்றுள்ளார். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளன.

மேற்கண்ட இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி நான்காம் இடத்தையே பிடித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்