"ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவோரின் வரி லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கவா?"

நேற்று இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை.

budget 2018

பட மூலாதாரம், Getty Images

'ஆண்டுதோறும் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என நடுத்தர வர்க்கம் எதிர்பார்ப்பது நியாயமானதா? நடுத்தர வர்க்கத்துக்கு வரிச்சலுகை தர முடியாத அளவு மத்திய அரசின் நிதி நிலைமை உள்ளதா?' என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

முத்துச்செல்வம் எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார், "முதலில் இது யாருக்கான பட்ஜெட் என தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களிடம் வரி வசூலித்து லட்சகணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள்."

"ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் இதர வகையில் அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயும் ஆண்டுக்கு ஆண்டு பலமடங்கு அதிகரிக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் தனிநபர் வருமானத்திற்கான வரி விலக்கு வரம்பை உயர்த்துவதால் அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுவதுபோல் நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்டுவதும், பிறதுறைகள் மற்றும் நலத்திட்டங்களுக்கான மானியங்கள் உள்ளிட்ட உதவிகளை (அரசின் கடமைகளை) அளிக்காமல், கடன் உதவிகளை அதிகரிக்கிறோம் என்பதும், அரசானது தன்னுடைய நிரந்தர வருவாய்களுக்கு மக்களைத் தங்களின் நிரந்தர வாடிக்கையாளர் வரம்புக்குள் மட்டுமே வைத்திருக்க அரசு விரும்புகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது," என்கிறார் சக்தி சரவணன்.

"குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், எம்.எல்.ஏ. & எம்.பி. எல்லாம் பரம ஏழைகள் ஆதலால் அவர்கள் அவர்களுடைய சம்பளத்தை அவர்களாகவே உயர்த்திக்கொள்லலாம். நாம் எதையும் செய்யமுடியாது. கேட்டால் ஆண்டி-இந்தியன் என்பார்கள். அவர்கள் எல்லாவிதமான சலுகைகளும் அனுபவிக்கலாம்," என்று கூறியுள்ளார் ஆனந்த் மேகநாதன்.

"நடுத்தர வர்க்க மக்களை காவுவாங்குவதிலேயே குறியாய் உள்ளது பிஜேபிஅரசு. நீதிபதிகளுக்கு 2௦௦% சம்பள உயர்வு, MLA களுக்கு 1.5 மடங்கு, தொழிலாளிகளுக்கு ....?" என்கிறார் சூரியன் கருப்பையா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: