"குஷ்பு சொன்னதுபோல் எம்.பி, எம்.எல்.ஏ. ஊதியத்தை பிடித்தால் தவறில்லை"

  • 3 பிப்ரவரி 2018

தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்கக் கோரி, கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழக போக்குவரத்து ஊழியர்களின் ஏழு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது தமிழக அரசு.

படத்தின் காப்புரிமை facebook
Image caption குஷ்பு

இது குறித்து கருத்து கூறியுள்ள, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, தொடர்ந்து அவை நடவடிக்கைகளை முடக்கும் எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குஷ்புவின் வாதம் நியாயமானதா என்று #வாதம்விவாதம் பகுதியில் பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்கப்பட்டதா கேள்விக்கு அவர்களின் பதிலை தொகுத்து வழங்குகிறோம்.

"அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் விடுத்த வேலைநிறுத்த போராட்ட அம்பு ஒன்றில், பேருந்து பயணக் கட்டண உயர்வு மற்றும் போராட்ட நாட்களின் ஊதியப் பிடித்தம் என இருப் பெரும் வருவாய் ஆதாயம் அடைய முயலும் தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினரது (அமைச்சர் உள்பட) சட்டமன்ற வெளிநடப்பு, விடுப்பு, தொகுதி மக்களை அணுகாமை மற்றும் அரசுப்பணி நேரங்களில் உல்லாச விடுதி ஓய்வு, கட்சி பணி, இடைத்தேர்தல் பிரசாரம் போன்ற அரசுப் பணிகளற்ற செயல்களுக்கான நேரங்களைக் கணக்கிட்டு அவர்களது ஆண்டு வருவாயில் பிடித்தம் செய்வது மிகவும் ஏற்புடையதாக அமைவதோடு, மக்களின் வரிப் பணம் விரயமின்றி மிகுந்தளவில் சேமிக்கப்படும்," என்று கூறியுள்ளார் சக்தி சரவணன் எனும் நேயர்.

"இதில் அரசியல்தான் அதிகம் உள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டம் வேறு அரசியல்வாதிகள் போராட்டம் என்பது வேறு. குஷ்புவின் வாதம் ஏற்று கொள்ள முடியாதது," என்கிறார் முத்துச்செல்வம்.

புலிவலம் பாஷா இவாறு கூறுகிறார், "கஷ்டப்படும் ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கும் அரசு ,லட்சங்களில் ஊதியம் வாங்கி மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கும் எம்.பி எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை பிடிப்பதில் தவறு ஏதும் இல்லை!!!!"

அரசியல் ஆதாயத்திர்க்காக பேசி இருந்தாலும் குஷ்பு பேசியது சரியே என்கிறார் கவிதா.

மாதாந்திர பஸ் பாஸ் ரத்து செய்யப்பட்டதால் உண்டான இழப்பை அரசு திரும்பக் கொடுக்குமா என்று கேள்வி எழுப்புகிறார் மோகன்ராஜ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்