செய்தித்தாளில் இன்று: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் - த இந்து (ஆங்கிலம்)

தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் அவற்றின் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை, அரசியல் சாசன பிரிவு 29(1) படி கலாசார உரிமையென பாதுகாத்து கொள்வது பற்றி உச்ச நீதிமன்ற அமர்வு முடிவு செய்யவுள்ளது.

வெள்ளிக்கிழமை இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் பகுதி III-யில் இருக்கும் பிரிவு 29(1) குடிமக்களின் கல்வி மற்றும் கலாசார உரிமைகளை அடிப்படை உரிமைகளாக உறுதிப்படுத்துகின்றது.

நீதிபதி லோயா மர்ம மரணம்: அமித்ஷாவை சேர்க்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - தினமணி

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE/AFP/Getty Images

நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த வழக்கில் அமித்ஷாவை சேர்க்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதை தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இது பற்றிய வழக்கில் பிராதன விஷயங்களைத்தான் விசாரிப்போமே தவிர, சொராபுதீன் என்கவுண்டர் விவகாரத்தில் இருந்து பாஜக தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டதைக் கருத்தில் கொள்ள இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளதாக இந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லோயா இறப்பு தொடர்பான வழக்கில் அமித் ஷாவையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

போக்குவரத்து காவல்துறையினருக்கு உடலோடு பொருத்தும் கேமரா அறிமுகம் - த இந்து (தமிழ்)

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE/AFP/Getty Images

மணிகண்டன் மரணம் எதிரொலியால், போக்குவரத்து காவல்துறையினருக்கு உடலோடு பொருத்தும் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக த இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறையினர் தரக்குறைவாக திட்டியதால் மனம் உடைந்த மணிகண்டன் என்ற இளைஞர் தீக்குளித்து இறந்தார்.

அதனால், பொது மக்களின் கோபம் காவல்துறையினர் மீது திரும்பியதை அடுத்து இருதரப்பிலுள்ள குறைகளை களையவும், வெளிப்படை தன்மையை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.

இந்த நடவடிக்கைகளில் முதலாவதாக, காவல்துறையினருக்கு உடலோடு பொருத்தும் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: