அரசியலில் நிலவும் ஊழல் கல்வித் துறையையும் சீர்குலைத்துள்ளதா?

  • 4 பிப்ரவரி 2018

பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை WWW.B-U.AC.IN

'கல்வித்துறையில் இதுபோன்ற சீர்கேடுகளுக்கு சமுதாயத்தில் நிலவும் ஒட்டுமொத்த ஊழல் போக்கு காரணமா?அரசியலில் நிலவும் ஊழல் கல்வித் துறையையும் சீர்குலைத்துள்ளதா?' என்று பிபிசி ,தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நேயர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"படிக்காத அரசியல்வாதிகளும் படித்த கல்வியாளர்களும் அயோக்கியத்தனம் செய்வது அறிதல்ல இந்த இந்திய நாட்டில்," என்கிறார் ரமேஷ் சுப்பிரமணி.

இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். உயர்கல்வி முழுவதும் சீர்கெட்டுத்தான் இருக்கிறது என்கிறார் கண்ணன் நடராஜன்.

படத்தின் காப்புரிமை WWW.B-U.AC.IN

" இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஆம் என்பது தான். ஒட்டு மொத்த சமூகமும் ஊழலுக்கு துணை நிற்க தான் செய்கிறது. பணியாளர் தேர்வாணையம் முதல் கிராம பஞ்சாயத்து கடைநிலை ஊழியர் நியமனம் வரை ஊழல்தான். சக தேர்வர்கள் நேர்மையாகத்தான் நேர்முக தேர்வை எதிர்கொள்கிறார்கள் என்ற நம்பிக்கை பெரும்பானவர்களுக்கு இருப்பதில்லை. அதற்கு ஏற்ப சிலருக்கு அங்கு நிர்வாகத்தால் அளிக்கபடும் சலுகைகளை கண்ணெதிரே சகஜமாக பார்க்கலாம் தமிழ்நாட்டில்," என்கிறார் முத்துச்செல்வம்.

அரசியல் கல்வி மீது பெறும் தாக்கத்தை கொண்டுள்ளதையே இது காட்டுகிறது என்கிறார் தரோ ரோக தயா எனும் பெயரில் பேஸ்புக்கில் பதிவிடும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :