அம்மனுக்கு 'சுடிதார் அலங்காரம்': அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்த ஆதீனம்

அம்மன்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தனி சன்னதியில்அருள்பாலிக்கும் அபயாம்பாள் அம்மனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுடிதார் அணிவித்தது போல சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதில் தொடர்புடைய ராஜூ குருக்கள், கல்யாண சுந்தரம் குருக்கள் ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்து திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவிட்டுள்ளார்.

ஆகம விதிகளுக்கு புறம்பாக, ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்