ஸ்ரீநகர் மருத்துவமனையில் சந்தேக தீவிரவாதிகள் தாக்குதல்

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் அட்டூழியம் படத்தின் காப்புரிமை TAUSEEF MUSTAFA/AFP/Getty Images

ஸ்ரீநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சந்தேக தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதில் ஒரு காவலாளி மரணம் அடைந்துள்ளார்.

ஸ்ரீநகரில் உள்ளூர் செய்தியாளர் மஜித் ஜஹாங்கிரீடம் பேசிய ஜம்மு & காஷ்மீர் காவல்துறை டி ஐ ஜி குலாம் ஹாசன் '' ஒரு பாகிஸ்தானி தீவிரவாதியை காவல் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள எஸ் எம் ஹெச் எஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சந்தேக தீவிரவாதிகள் தாக்கினார். அதில் ஒரு காவலாளி இறந்துள்ளதார்'' என தெரிவித்துள்ளார்

இந்தியா ஆட்சியின் கீழ் உள்ள காஷ்மீரின் காவல்துறையின் கருத்துப்படி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தீவிரவாதி இந்தத் தாக்குதலின்போது தப்பிஓடி விட்டார்.

தப்பியோடிய தீவிரவாதி நவீத் ஜாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

இன்றைய தாக்குதல் நிகழ்வுக்குப் பிறகு ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்