வாதம்விவாதம்: பொறியியல் படிப்பு தேர்ச்சி சதவீதம் குறைய இதுதான் காரணமா?

  • 7 பிப்ரவரி 2018

பொறியியல் படிப்புகளில் முதல் செமஸ்டர் தேர்வில், வெறும் 32 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இது தொடர்பாக, மாணவர்களிடையே பொறியல் படிப்பிற்கான ஆர்வம் குறைந்தமை காரணமா? பாடத்திட்டத்தில் மாற்றங்கள் தேவையா? என்று பிபிசி தமிழின் வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"இந்த இஞ்சினியரிங் படிப்பில் இந்நாள்வரை நூற்றுக்கு பத்து சதவிதமே விரும்பி சேர்பவர்கள்...

மற்றவர்கள் கவுரவத்திற்காகவும்., பெற்றவர்கள் மற்றும் உறவினர்களின் கட்டாயத்திற்காகவும் சேர்பவர்களே... இதை இல்லை என மறுக்கமுடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார் ரமேஷ் நாரயண்.

"பொதுவாக அனைத்து பல்கலைக்கழகங்களும் இதையே பின்பற்றுகின்றன ... உதாரணமாக ஒரு வகுப்பில் நீங்கள் குறிப்பிட்டுள்ள மாதிரி 35% மாணவர்கள் தேர்ச்சி என்றால் மற்ற 75%மாணவர்கள் தேர்ச்சி நிலை கேள்வி குறி தான் ஒன்று ...இரண்டு பல்கலைக்கழகங்கள் இலாப நோக்கோடு செயல் பட தேர்ச்சி விகிதத்தை குறைந்து மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க அல்லது மறு தேர்வில் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உட்படத்த படுகிறார்கள்... என்பதே உண்மை" என்கிறார் சுரேஷ்.

"தொடக்கக் கல்வி, உயர் கல்வி முதல் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் வரை மாணாக்கர் காணாதவற்றை, கல்லூரியின் முதலாம் ஆண்டில் பயிற்றுவிக்கும் முறை, பேராசிரியர் / விரிவுரையாளர் அணுகுதல், தேர்வு முறை எனப் பலவற்றில் பள்ளிக் கல்வி முறையிலிருந்து மாறுபட்ட சூழல்களை தனித்து எதிர்கொள்ள நேர்வதால் முதலாம் ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் எதிர்பாராத தொய்வு ஏற்படுகிறது. மனப்பாட முறையில் மதிப்பெண்களுக்கு முதன்மை கொடுக்காமல் பாடத்திட்டத்தை பொது அறிவு ஊக்குவிப்போடு ஒவ்வொரு மாணாக்கரும் தன்னுடைய தனித்திறன் படைப்பாற்றலின் மூலம் எந்தவொரு தேர்வுகளையும் எதிர்கொள்ளுமாறு பள்ளிக் கல்வி முறையை மேம்படுத்த வேண்டும்." என்பது சக்தி சரவணனின் கருத்து.

புலிவலம் பாட்ஷா, "பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கேள்வி குறியாக இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பதில் ஆர்வம் குறைந்துள்ளது" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"சாதிக்கவேண்டும் எனநினைத்து சேர்பவர்கள் வெற்றியடைகிறார்கள்,கெளரவத்திற்க்காக சேருபவர்கள் நிலைதான் கேள்விகுறி" என்கிறார் தர்மராஜ் செல்லா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்