அயோத்தி வழக்கை நிலப் பிரச்சனையாக மட்டுமே அணுகுவோம்: உச்சநீதிமன்றம்
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமணி
பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆண்டுக்கு 10,798 மெவார்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் 500 மெகாவார்ட், பிற மாநிலங்களுக்கு வழங்கும் அளவில் நமது மாநிலத்தில் உபரியாக உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
பட மூலாதாரம், Getty Images
விமானங்களின் எண்ணிக்கை குறைவால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கோடை விடுமுறையை திட்டமிடுபவர்கள் அதிகப்படியான விமான கட்டணங்களை செலுத்த நேரிடும் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
பட மூலாதாரம், Getty Images
அயோத்தியா வழக்கை ஒரு நிலப் பிரச்சனையாக மட்டுமே அணுகுவோம் என்றும் இந்நிலையில் மூன்றாம் நபர்கள் தலையீட்டை அனுமதிக்க இயலாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக டெல்லியிலிருந்து வெளியாகும் ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது.
தினத்தந்தி
விபத்தில் சிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுவதாக தினத்தந்தியில் தலைமை செய்தி வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்