“பிறரைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லாத மக்களாக மாறிப் போயுள்ளோம் ”

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புற்று நோயால் இறந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பிள்ளைகள் பிச்சை எடுத்த அவலம் நிகழ்ந்துள்ளது.

தாயை அடக்க மகன் பிச்சையெடுப்பு

இந்நிலைக்கு, சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் இதற்கு காரணமா? ஏழைகள் மீதான அரசின் அணுகுமுறையில் மாற்றங்கள் தேவையா? என்று பிபிசியின் ‘வாதம் விவாதம்‘ பகுதியில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட கேட்டிருந்தோம்.

சமூக வலைதளங்களில் பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முத்து செல்வன் பிரேம் என்ற நேயர், “சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகள் காரணம் என்பதான் உண்மை. அரசிடமிருந்து அடிப்படை வசதிகளை எதிர்பார்க்க வேண்டும் அதை விட்டு விட்டு இலவசங்களை எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து இன்னும் சரியாக தெரியவில்லை” தெரிவித்திருக்கிறார்.

டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அருண் என்ற நேயர் எல்லாவற்றைக்கும் அரசை இக்காலத்தில் குறைகூறி பயனில்லை என்கிறார்.

புலிவலம் பாஷா என்ற நேயர் “ஏழைகளை பற்றி சிந்திக்க அரசுகளுக்கு நேரம் இல்லை, இப்படி பட்ட அவலம் தமிழகத்தில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது!!! என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

முகாவி செல்வன் என்ற நேயர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், இந்த அரசு முழுக்க முழுக்க கார்பரேட்களுக்கான அரசு என்கிறார்.

ரமேஷ் சுப்பிரமணின் என்ற நேயர், ஏழை-பணக்காரன், படித்தவன்-படிக்காதவன், ஏமாளி-ஏமாற்றி பிழைக்கத் தெரிந்தவன் இது போன்ற பல ஏற்றத்தாழ்வு நிலை இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றது. பிழைக்கத் தெரிந்த வர்க்கம் சிறப்பாக உள்ளது. பிழைக்க வழி தெரியாமல் இவர்களை போன்றவர்கள் செய்வது அறியாமல் வாழ்நாட்களை நகர்த்துகின்றனர் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ராஜ்மோகன் காசி என்ற நேயர் அறியாமை அகலும்வரை ஏற்றத்தாழ்வை அகற்ற முடியாது என்று தன்னுடைய கருத்தை உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

அப்துல் வாஹாப் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், மிகவும் வருந்தத்தக்கது. நம் நாட்டில் அடுத்தவரை சிந்திக்க நேரம் இல்லாத மக்களாக நாம் மாறி போய் உள்ளோம் என்று ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

அனந்த் என்பவர் டுவிட்டரில் ஏழைகள் மீதான அரசின் அணுகுமுறை மாற்றங்கள் தேவை என்கிறார்.

பார்த்த சாரதி என்ற நேயரோ, தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் நம் ஜகத்தினை அழித்திடுவோம் .....பாரதி சொன்ன நாட்டில் வாழ்ந்துட்டு இருக்கிறோம் என்று ஃபேஸ்புக் பதவில் நினைவூட்டுகிறார்.

சிலுவைமுத்து வடலி என்கிற நேயர் ஆதார் எண் எடுக்கும் அரசு இப்படி சேதாரத்துக்கு வழி சொல்லலியே என்ற கவலையை பதிவிட்டுள்ளார்.

பாரதவா தமிழன் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், எங்கே இருக்கிறது அரசு தமிழ்நாட்டில்? என்று கேள்வியே கேட்டுவிட்டார்.

முரளி தேவி என்ற நேயர் இதுவும் தமிழ்நாட்டில்தானே நடக்கிறது. அதுவும் பணக்காரநாடுகளில் 6வது இடமும் இங்கேதான் என்று ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

தாயின் இறுதி சடங்கிற்கு பிள்ளைகள் பிச்சையெடுத்த காணொளி:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :