ஆதார் இல்லாததால் அனுமதி மறுத்த மருத்துவமனை, சாலையோரம் பிரசவித்த பெண்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஆதார் அட்டை இல்லாததால் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துமனையில் வளாகத்துக்கு வெளியே சாலையோரத்தில் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்தார்.

ஆதார் எண்ணைக் கூறியும் அட்டை இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டதாக அவரது கணவர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 9,10,11,12 ஆகிய வகுப்புகளைச் சிறந்த மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று தினத்தந்தியின் முதல் பக்கச் செய்தி தெரிவிக்கிறது.

தினமணி

காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் வாடிவிடுமோ எனும் அச்சத்தில் விவசாயிகள் இருப்பதாக தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

ஏரி மற்றும் தடுப்பணைகளில் தேக்கி வைத்துள்ள நீரை கர்நாடகம் கருணையுடன் திறந்துவிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

வரி ஆவணங்களைத் தாக்கல் செய்யமால் தவிற்பவர்களைக் கண்காணித்து கூடுதலாக 1.7 கோடி ஆவணங்களை தாக்கல் செய்யவைத்து, தொடர்புடையவர்களை வரி செலுத்த வைத்ததன்மூலம் மத்திய அரசுக்கு கடந்த டிசம்பர் மாதம் வரை 26,500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் வரி வருவாய் இருந்தும் வரிக்கணக்கு தாக்கல் செய்யாத 35 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: