வாதம் விவாதம்: ''அரசு கண் மூடி மவுனமாக இருக்கிறது''

''அரசு கண் மூடி மவுனமாக இருக்கிறது''

பட மூலாதாரம், Getty Images

பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பல்லாயிரம் சிறார்களிடம் தேசிய மன்னிப்பு கேட்க ஆஸ்திரேலியப் பிரதமர் முடிவு செய்துள்ளார்.

''சிறார் பாதுகாப்பில் இந்த அளவுக்கு பெரும் பிரச்சினை இந்தியாவில் இல்லையா? இத்தகைய குற்றங்கள் குறித்து இந்தியாவில் முறையான விசாரணையும், ஆவணப்படுத்தலும் நடக்கவில்லையா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டிய அரசு, கண் மூடி மவுனமாகத்தான் இருக்கிறது. எங்கே சட்டம் கொண்டு வந்தால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் தண்டனை கிடைத்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக கண்டும் காணாமல் இருக்கிறது'' என கூறியுள்ளார் புலிவலம் பாஷா.

''பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது குறித்தோ அல்லது இதுபோன்ற பாதிப்பு நடக்காமல் இருக்க கடுமையான சட்டம் இயற்றுவது பற்றியோ பேசாமல் மன்னிப்பு கேட்பது என்ன நீதி?'' என கேள்வி எழுப்பியுள்ளார் ஹுதயத்துல்லா.

''என் இல்லை? ஆறு வயது ஹாசினி முதல் அறுவது வயது பாட்டி வரை, பெண்களை உபயோகித்து விட்டு கொன்று தூக்கிப் போட்டு விடுகிறார்களே. ஆனால் அதற்காக வருத்தப்படுவதற்குக் கூட அரசியல்வாதிகள் தயாராக இல்லை.'' என பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

''இங்கு இன்னும் அடிமைத்தனம் உள்ளது. சுய மரியாதை பற்றிய புரிதல் வேண்டும்.'' என்பது கந்தவேல் ராஜாவின் கருத்து.

''பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை அளித்தலே, இதைத் தடுக்க உள்ள ஒரே வழி'' என்கிறார் முகமத் அஃப்ரின்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :