வாதம் விவாதம்: ''தமிழக அரசின் மெத்தனமே இதற்கு காரணம்!''

எய்ம்ஸ் மருத்துவமனை படத்தின் காப்புரிமை MANPREET ROMANA/AFP/Getty Images

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பெ வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில்,''தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் முன்பே அறிவிக்கப்பட்டப் பின்னும், அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் தமிழக அரசு உரிய காலக்கட்டத்தில் முடிவு எடுக்கவில்லையா? தங்கள் மாவட்டத்தில் எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும் என்ற அரசியல் ரீதியான அழுத்தங்கள்தான் தாமதத்திற்கு காரணமா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் சிரமமின்றி வந்து செல்ல மாநிலத்தின் மத்திய பகுதியை தேர்ந்தெடுத்தல் நல்லது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சாமானிய மக்களும் பயன் பெறும் வசதியை உண்டாக்க வேண்டும். மேல் தட்டு மக்கள் மாத்திரம் பயனடையும் வகையில் அமைக்கக்கூடாது.'' என சிவக்குமார் பதிவிட்டுள்ளார்.

'' தமிழகத்தின் மத்தியில் இருக்கும் மதுரை, தஞ்சாவூரில் எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் அப்பகுதி மக்களுக்குதான் தரமான மருத்துவ வசதி அதிகம் தேவைப்படுகிறது'' என்கிறார் மித்ரா ரமேஷ்.

''எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைந்தால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்குமோ அந்த இடத்தில் அமைப்பது சரியானதாக இருக்கும்!!!'' என்கிறார் புலிவலம் பாஷா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்