கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்? சமூக ஊடகங்களில் வைரலானது எப்படி?

யார் இந்த பிரியா பிரகாஷ்?

'பிரேமம்' சாய் பல்லவி, 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் வரிசையில் மீண்டும் இந்தியளவில் டிரெண்டிங்கை பிடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஒரு அடார் லவ்'. படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம் 9 ஆம் தேதி, யு டியூப் தளத்தில் 'மாணிக்க மலராய பூவி' என்ற பாடல் பதிவேற்றப்பட்டது. சில நிமிடங்களிலே மிகவும் வைரலான இப்பாடல் தற்போது வரை சுமார் ஐந்து லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

பாடல் பிரபலமானதற்கு மற்றொரு முக்கிய காரணம் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர்.

பாடல் நடுவே அவர் புருவத்தால் செய்யும் மாயாஜால ரொமான்ஸால் பாட்டிற்கு எக்கச்செக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை சமூக ஊடகங்களில் பிரியா குறித்த மீம்கள் குவிந்து வருகின்றன. பிரியா பிரகாஷ் வைரலான பிறகு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கின் பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

யார் இந்த பிரியா பிரகாஷ்?

கேரளாவை சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்தான் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம்.

படத்தின் காப்புரிமை Instagram
படத்தின் காப்புரிமை Instagram
படத்தின் காப்புரிமை Instagram

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்