வாதம் விவாதம்: ''ஜெயலலிதாவின் படம் சட்டசபை மாண்பை குலைக்கிறதா?''

முதல்வர் ஜெயலலிதாவின் படம் படத்தின் காப்புரிமை Twitter

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டுள்ளது. ``இது சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கும் செயல் என்ற மு.க ஸ்டாலினின் கருத்து சரியா? படத்திறப்பு விஷயத்தில் எதிர்க்கட்சிகள் வீண் எதிர்ப்புகளை எழுப்புகின்றனவா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''இந்திரா காந்திக்கு பிறகு ஒரு சிறந்த பெண்ணாகத் தைரியம் மிக்க அரசியல் தலைவராக கட்சியையும் ஆட்சியையும் ராணுவ கட்டுக்கோப்புடன் வழி நடத்தியவர் 5 முறை முதல்வராக இருந்தவர் எந்த முடிவையும் தைரியமாக எடுப்பவர் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவராக தென்னகத்தின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த ஜெயலலிதாவின் படம் சட்டசபையில் வைப்பதால் தவறு ஏதும் இல்லை!'' என்கிறார் புலிவலம் பாஷா.

''பிற்காலத்தில் இளையோர்களிடம் எதிர்மறையான சிந்தனைகளை இது உருவாக்கலாம்!. அதிகாரத்தில் இருந்து தவறு செய்வதை இயல்பானது என்றும், அவ்வாறு செய்தாலும் நம்மைப் பாராட்டுவார்கள் என்ற மனோநிலையை உருவாக்க முற்படுவது வேதனையான ஒன்று!'' என பதிவிட்டுள்ளார் அப்ரார் எனும் நேயர்.

''தமிழக அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்துள்ளது. பல திறமை பெற்ற பெண், தன்னால் உருவாக்கப் பட்ட ஒரு சராசரி பெண்ணால் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்பட்டு கடைசியில் 75 நாள்கள் மர்மமாக ரகசியமாக வைக்கப்பட்டு மரணமடைந்தார். இவரை ஆகா ஓகோ என்று பாராட்டித் கொண்டிருக்கும் ஒரு கூட்டம். உலக அரங்கில் தமிழர்கள், தமிழ்நாட்டு அரசியல் குறித்து ஏளனம் செய்யும் நிலையை ஏற்படுத்தும் செயலாக இது உள்ளது.தவறான முன்னுதாரணமாக இருக்க போகிறது.'' என கூறுகிறார் கனகராசா சிதம்பரம்.

''இது தேவையில்லாதது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கவனம் செலுத்த தமிழகத்தில் நிறையப் பிரச்சனைகள் உள்ளன. குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை திறப்பது தவறான ஒன்று'' என்கிறார் மைக்கில் சுந்தர்ராஜன்.

''குற்றவாளி இங்கு யாரு தான் இல்லை. ஒரு பெண்ணாய் பல சோதனைகளை கடந்து திகழ்ந்தவர். இன்று அரசியலுக்கு ஆளுக்கு ஆள் வருகிறார்களே? ஜெயலலிதா இருக்கும் பொழுது எங்கு ஒளிந்து இருந்தார்கள்'' என்கிறார் வெங்கடேஷ்.

''குற்றம்சாட்டப்பட்ட நபர் என்றால் கூட வைப்பதில் தவறு இல்லை, ஆனால் பல ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கில் முதல் குற்றாளியாக நிருபிக்கபட்ட ஜெயாவின் படத்தை வைப்பது குற்றமே'' என்பது விஜயின் கருத்து.

''குற்றவாளிக்கு இப்படி நடந்தால் அடுத்த குற்றவாளிகள் தவரை துணிந்து செய்வார்கள் அப்பத்தான் சட்டசபையில் போட்டோ மாட்டுவார்கள் என்று'' என்கிறார் அன்பு.

''தமிழ் நாட்டையே ஒரு குடும்பத்திடம் அடகு வைத்த ஜெயலலிதாவின் படம் சட்டசபையில் இடம் பெற கூடாது. சட்ட சபையில் ஜெயலலிதாவின் படம் திறப்பதால் ஏழை மக்களுக்கு என்ன நன்மை?'' என கூறுகிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.

''அவரின் கருத்து தவறானது. ஒரு படத்திறப்பு எப்படி சட்டசபை மாண்பை மீறிய செயலாகும். ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றிய திட்டங்கள் , அவரின் செயல்பாடுகள், அவரின் வெற்றிகள் அனைத்தும் தமிழக மக்களுக்கானது ஆகும்.'' என்கிறார் துரை முத்துசெல்வன்

''நீதி மன்றம் முறையாகச் செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒரு சமயம் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடுவதில்லை என்று கூறுகிறது. மற்றொரு சமயம் ஆணையிடுகிறது.'' என கூறுகிறார் சோலையப்பன்.

''அரசியல் வாதிகளைத் தெய்வீக நிலைக்குள் தள்ளுவதே நாம் செய்யும் பெரிய அறியாமை'' என கருதுகிறார் வேலாயுதம் கந்தசாமி.

''திராவிட கட்சிகளின் இரு தலைவர்களும் ஊழல் செய்தவர்கள் தான், ஆகவே படம் சிலை நினைவு மண்டபம் என்பன வேண்டாம். தற்போது தமிழக மக்களின் நலனில் நாட்டம் செலுத்த வேண்டும்.'' என்கிறார் கண்ணன்.

''கடைசி காலத்தில் உண்மையாகவே அவர் தமிழ் நாட்டிற்குச் செய்ததற்கான சாட்சிகள் நிறைய இருக்கு.சரியே'' என்கிறார் இஸ்மாயில்.

'' ஜெயலலிதா தமிழ்நாட்டிற்கு நிறையவே செய்துள்ளார். மற்ற அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது அவர் சிறந்தவர்'' என கூறியுள்ளார் ஸ்ரீனிவாசன்.

'' கருத்து சரி...சொன்னவர் தான் சரியில்லை'' என்கிறார் அக்னி விஜய் எனும் நேயர்.

''ஊழலில் பெயர்பெற்ற அவர் படத்தை வைக்கக்கூடாது'' என்கிறார் மேக்ஸ் எனும் நேயர்.

''இது தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட அவமதிப்பு'' என கூறுகிறார் சிலுவைமுத்து.

''மிகவும் தவறான செயல் ....இதில் அரசியல்வாதியின் திமிர் தெரிகிறது.'' என்கிறார் மதன்குமார்.

''A1 குற்றவாளி படம் கூடாது'' என்கிறார் வில்வம்.

''அவர் உயிரோடு இருந்த போதுவிடுதலை பெற்றவர்! இந்த உலகை விட்டு மறைந்த போது மக்கள் மன்றத்தில் பெருவாரியாக ஓட்டு வாங்கி வெற்றி பெற்றவர்! மக்கள் தீர்பே!மகேசன் தீர்ப்பு!. அவரை வெற்றி பெற முடியாத சிலர் இன்றைக்கும் புலம்பும்போது இன்னும் அவரது ஆளுமை மறையவில்லை என்றே புலப்படுகின்றது! '' என்கிறார் ஜகதீஸ்.

''ஸ்டாலின் சொல்வது சரியே ''என்கிறார் தேவகுமார்.

''மாண்பைக் குலைக்கும் செயல்தான்'' என்கிறார் பாலகிருஷ்ணன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்