‘பணக்கார முதல்வர் யார்?’: மாநில முதல்வர்கள் மத்தியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு!

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (ஆங்கிலம்) - 'பணக்கார முதல்வர் யார்?'

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சாமானியர்களிடம் மட்டும் இல்லை, மாநில முதல்வர்கள் மத்தியிலும் நிலவுகிறது என்று விவரிக்கிறது ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வு முடிவுகளை ஆதாரம் காட்டி வெளிவந்துள்ள தி இந்து நாளிதழ் செய்தி. தேசத்தின் ஏழை முதல்வருடன் ஒப்பிடுகையில் தேசத்தின் பணக்கார முதல்வர் 680 மடங்கு செல்வந்தராக உள்ளார் என்கிறது அந்த செய்தி. நாட்டின் பணக்கார முதல்வர் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்றும், அவரின் சொத்து மதிப்பு 177 கோடி என்றும், தேசத்தின் ஏழை முதல்வர் திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் என்றும், அவரின் சொத்து மதிப்பு 26 லட்சம் என்றும் விவரிக்கிறது அந்த செய்தி.

தினத்தந்தி - "கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை"

படத்தின் காப்புரிமை Getty Images

குத்தகை, வாடகை பாக்கி வைத்து உள்ளவர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது தொடர்பாக தினத்தந்தி நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வி.முத்துசாமி என்பவர் கோவில் நிலம் தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தி இந்து (தமிழ்)

படத்தின் காப்புரிமை தி இந்து

தினமணி - 'நீதியில் அநீதி`

நீதித் துறையில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று தினமணி நாளிதழ் தலையங்கம் எழுதி உள்ளது. "பெண்கள் மிக அதிகமாக உள்ள இந்திய சமுதாயத்தில் அவர்களுக்குத் தர வேண்டிய முக்கியத்துவமும் இடமும் வாய்ப்பும் நீதித் துறையில் வழங்கப்படாமல் இருப்பது நியாயமல்ல். மக்களவையிலும் சட்டப்பேரவையிலும் மகளிருக்கான இட ஒதுக்கீடு தேவையா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் கணிசமான அளவில் பெண் நீதிபதிகள் இடம் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது" என்று விவரிக்கிறது அந்த தலையங்கம்.

"ஜாக்கிரதையாக இருங்கள்" - டைம்ஸ் ஆஃப் இந்தியா

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய உளவு அமைப்பு தங்களது அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் இந்து சங் அல்லாத பிற அமைப்புகளை விசாரிக்கும் போது, மிகவும் கவனமாகவும், விவேகத்துடனும் செயல்படுங்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்து ஹெல்ப் லைன் மற்றும் இந்தியா ஹெல்த் லைன் ஆகிய அமைப்புகளை விசாரித்தது தொடர்பாக, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் பிரவின் தொகாடியா, ஐ.பி (உளவு அமைப்பு) தலைவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு கடுமையாக கடிதம் எழுதி இருந்தார். அதில், ஐ.பி அமைப்பு மேற்கொண்ட இந்த திடீர் விசாரணைக்காக மன்னிப்பு கோரி இருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்