குழந்தையை கொன்ற இடத்திலேயே பிடிபட்ட சிறுத்தை (காணொளி)

குழந்தையை கொன்ற இடத்திலேயே பிடிபட்ட சிறுத்தை (காணொளி)

கோவை மாவட்டம் வால்பாறையில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கடந்த 8ஆம் தேதி நடுமலை எஸ்டேட் பகுதியில், செய்துல் என்ற குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று பார்த்த போது குழந்தை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது.

இதையடுத்து ஆட்கொல்லியாக மாறிப் போன சிறுத்தையைப் பிடிக்க நடுமலை எஸ்டேட், சிஎஸ்ஐ சர்ச் வளாகம், பொதுப்பணித்துறை குடியிருப்பு மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் நடுமலை எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. குழந்தை கொல்லப்பட்ட இடத்தின் அருகிலேயே சிறுத்தை சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: