பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டம்?

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி - 'இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டம்'

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் தாக்குதல்கள் நடத்தும் நோக்கத்துடன் ஊடுருவ, பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக வடக்கு பிராந்திய தலைமை அதிகாரி தேவராஜ் அன்பு எச்சரித்துள்ளதாக தினமணி நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.

தினத்தந்தி - 'கமலின் கட்சி பெயர் என்ன?'

படத்தின் காப்புரிமை NOAH SEELAM

21ஆம் தேதி கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிப்பது தொடர்பாக, தனது மன்ற நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கமல் ஆலோசனை நடத்தியதாக தினத்தந்தி நாளிதழின் முதல்பக்க செய்தி கூறுகிறது. கட்சியினை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து (தமிழ்) வெளியிட்ட கார்டூன்

படத்தின் காப்புரிமை தி இந்து

டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'தீவிரவாதி கைது'

படத்தின் காப்புரிமை Getty Images

2008ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியின் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ஆரிஸ் கானை புலனாய்வு அமைப்புகள் கைது செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: