சம்ஸ்கிருதத்தைவிட பழமையானது தமிழ்: நரேந்திர மோதி

டெல்லி டால்கொட்டரா அரங்கில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வது பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான தமிழ் மொழி சமஸ்கிருத்த்தை விட மிகவும் தொன்மையானது என்பது சிலருக்கு மட்டும்தான் தெரியும் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், PRAKASH SINGH

படக்குறிப்பு,

பிரதமர் நரேந்திர மோதி

மிகவும் இனிமையான, அழகான தமிழ் மொழியில் தம்மால் பேச முடியவில்லை என்று வருத்தப்படுவதாகவும், வணக்கம் சொல்ல மட்டுமே தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

மாணவர்களிடையே சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாற்றிய பிரதமர், நாடு முழுவதும் இருக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு உரையின் இறுதியில் இவ்வாறு கூறினார்.

இன்று இங்கு கூடியிருக்கும் மாணவர்களிடம் அவர்கள் மொழியில் பேசமுடியாததை நினைத்து வருந்துகிறேன், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ARUN SANKAR

படக்குறிப்பு,

பிரதமர் நரேந்திர மோதியுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள்

ஆனால் எதிர்காலத்தில் மாணவர்களின் தாய்மொழியில் தமது உரையை கொண்டு செல்ல முயற்சிக்கப்போவதாக பிரதமர் நரேந்திர மோதி உறுதி கூறினார்.

மன அழுத்தம் இல்லாமல், புன்னகையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்குபிரதமர் மோதி அறிவுரை கூறினார்.

எனக்கு என்ன மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்று கூடியிருந்த மக்களிடம் கேட்ட அவர், பத்துக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டீர்களா என்று நகைச்சுவையுடன் கேட்டார்.

பட மூலாதாரம், Penguin

தனது தேர்வுக்கு 125 கோடி மக்களின் ஆசீர்வாதம் தன்னுடன் இருப்பதுதான் தன்னுடைய வலிமை என்றும், அந்த நம்பிக்கையிலேயே தான் செயல்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :