கண் திருஷ்டியில் இருந்து பயிரைக் காக்க சன்னி லியோன் போஸ்டர் ஒட்டிய விவசாயி

  • 18 பிப்ரவரி 2018

ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பண்டாகிண்டபல்லே கிராமத்தை சேர்ந்த விவசாயியான செஞ்சு ரெட்டி, தனது வயல்வெளியை கடந்து செல்பவர்களின் கண்படாமல் இருப்பதற்காக அதன் முன்புறத்தில் பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் போஸ்டரை வைத்தது வைரலாகி வருகிறது.

பத்து ஏக்கர் விவசாய நிலத்தை வைத்துள்ள செஞ்சு கத்தரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், மிளகாய் மற்றும் வெண்டைக்காய் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்.

இந்தாண்டு தனது பண்ணை சிறந்த சாகுபடியை பெற்றுள்ளதால் கிராமத்தினர் மற்றும் பண்ணையை கடந்து செல்பவர்களின் கவனத்தை பெற்றுவருவதாக அவர் கூறுகிறார்.

மேலும், கிராமத்தினர் மற்றும் பண்ணைய கடந்து செல்பவர்களின் கண்படாமல் இருப்பதற்காக "ஹே! என்னை பார்த்து அழாதீர்கள்" என்ற வாசகத்துடன் கூடிய சன்னி லியோனின் போஸ்டரை ஒட்டுவதற்கு முடிவெடுத்ததாக பிபிசியிடம் பேசிய செஞ்சு ரெட்டி கூறினார்.

இந்த போஸ்டரை ஒட்டியதன் மூலம் பண்ணை மீதான மக்களின் கண்பார்வை திசைதிருப்பப்பட்டதாகவும், அது தனது சாகுபடியை பாதுகாப்பதற்கு உதவியதாகவும் கூறுகிறார்.

விவசாயியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பகுத்தறிவாளரான கோகினேனி பாபு, "முற்றிலும் மூடநம்பிக்கை நிறைந்த செயலான இது, வேடிக்கையானது" என்று தெரிவித்துள்ளார்.

"தீய கண்பார்வை என்ற கருத்து உண்மையானதாக இருந்தால், அனைவரின் பார்வையும்படும் சன்னி லியோனுக்கு என்னவாகும் என்றும், இந்த விவசாயியின் செயலுக்காக அவர் மீது சன்னி லியோன் வழக்குப்பதிவு செய்தால் அவர் எப்படி எதிர்கொள்வார்" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்